செய்திகள் மலேசியா
ரபிசி, நிக் நஸ்மி ஆகியோர் சபாநாயகரிடம் ராஜினாமா கடிதங்களைச் சமர்ப்பித்து நாடாளுமன்றத் தொகுதிகளை காலி செய்தனர்
கோலாலம்பூர்:
ரப்சி ரம்லி, நிக் நஸ்மி நிக் அஹ்மத் ஆகியோர் தங்களது ராஜினாமா கடிதங்களை அதிகாரப்பூர்வமாகச் சமர்ப்பித்து பாண்டன், செத்தியாவங்சா நாடாளுமன்றத் தொகுதிகளை காலி செய்துள்ளனர்.
இந்தக் கடிதத்தை ரபிசி, நிக் நஸ்மி ஆகியோர் மக்களவையின் சபாநாயகர் டான்ஶ்ரீ ஜொஹாரி அப்துலுக்கு இன்று முதல் அமலுக்கு வரும் வகையில் அனுப்பியுள்ளனர்.
கடந்த பொதுத் தேர்தலில் நாங்கள் நம்பிக்கை கூட்டணி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டதால், பாண்டன், செத்தியாவங்சா நாடாளுமன்ற இடங்களில் வாக்காளர்களுக்கு ஆணையைத் திருப்பிக் கொடுப்பதே சரியான மற்றும் கண்ணியமான நடவடிக்கையாகும்.
இரண்டு முறை நாடாளுமன்றத்தில் தங்களைப் பிரதிநிதித்துவப்படுத்த எங்களைத் தேர்ந்தெடுத்த பாண்டன், செத்தியாவங்சா வாக்காளர்களுக்கு எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்."
வாக்காளர்களுக்கு உதவிகளையும் சேவைகளையும் தொடர்ந்து வழங்குவதற்காக எங்கள் சேவை மையம் வழக்கம் போல் செயல்படும் என்று இருவரும் ஒரு கூட்டறிக்கையில் தெரிவித்தனர்.
அடுத்த தேர்தலில் கேள்விக்குட்பட்ட இடங்களில் போட்டியிடும் தங்களது நிலைப்பாட்டையும் அவர்கள் மீண்டும் வலியுறுத்தினர்.
முன்னதாக நேற்று இரண்டு தலைவரும் கட்சியிலிருந்து விலகுவதாகவும், பாண்டன், செத்தியாவங்சா நாடாளுமன்ற இடங்களைக் காலி செய்வதாகவும், மேலும் மலேசியா ஐக்கிய கட்சியை ஏற்றுக்கொள்வதாகவும் அறிவித்தனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 20, 2026, 6:10 pm
டிக்டாக் பதிவுகளால் நேர்ந்த விபரீதம்: இருவருக்கு அபராதம்
May 20, 2026, 5:18 pm
மெர்சிங்கைச் சுற்றியுள்ள கடல் பகுதிகளை ஆய்வு செய்த மாமன்னர்
May 20, 2026, 4:24 pm
BN, GRS, GPS உறுதிமொழி; அன்வருக்கு பலம் சேரும் அரசியல் நகர்வு
May 20, 2026, 12:14 pm
14 வயது மாணவருடன் பாலியல் அத்துமீறல்?: குற்றச்சாட்டுகளை மறுத்த ஆசிரியை
May 20, 2026, 12:00 pm
சரவாக் காடு காப்பகங்களில் இரண்டு புதிய உயிரினங்கள் கண்டுபிடிக்கப்பட்டன
May 20, 2026, 11:06 am
