செய்திகள் மலேசியா
14 வயது மாணவருடன் பாலியல் அத்துமீறல்?: குற்றச்சாட்டுகளை மறுத்த ஆசிரியை
சிரம்பான்:
14 வயது மாணவருடன் தொடர்புடைய ஐந்து அதிர்ச்சி பாலியல் குற்றச்சாட்டுகளில் சிக்கிய 41 வயது ஆசிரியை ஒருவர், செஷன் நீதிமன்றத்தில் அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்து விசாரணை கோரிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நூருல் அஸ்யிகின் சூதான் ஷஹ்ரில் என்ற ஆசிரியை, புதன்கிழமை நீதிபதி சித்தி ஆயிஷா அப் ரஷித் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போது, தமக்கு எதிராக வாசிக்கப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளையும் திட்டவட்டமாக மறுத்தார்.
அவர்மீது சுமத்தப்பட்ட மிகக் கடுமையான குற்றச்சாட்டு, “இயற்கைக்கு முரணான பாலியல் உறவு” தொடர்பானதாகும். இந்த குற்றம், குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்கள் சட்டம் 2017-ன் கீழ் பதிவு செய்யப்பட்டிருப்பதால், அவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையோடு பிரம்படி தண்டனையையும் எதிர்கொள்ள நேரிடலாம் என்பது குறிப்பிடப்பட்டுள்ளது.
விசாரணை ஆவணங்களின்படி, கடந்த ஏப்ரல் 7 ஆம் தேதி மதியம், சிரம்பானிலுள்ள ஒரு வீட்டில் இந்த சம்பவம் இடம்பெற்றதாக கூறப்படுகிறது.
அதுமட்டுமின்றி, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் இந்த ஆண்டு ஏப்ரல் வரை, அதே மாணவரிடம் உடல் ரீதியான, உடல் தொடர்பற்ற பாலியல் அத்துமீறல்களில் ஈடுபட்டதாக மேலும் நான்கு குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்த சம்பவங்கள் குடியிருப்பு பகுதி, அடுக்குமாடி வீடுகளில் நிகழ்ந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
வழக்குத் தொடரும் தரப்பு, ஒவ்வொரு குற்றச்சாட்டிற்கும் 30,000 ரிங்கிட் ஜாமீன் கோரியதுடன், குற்றஞ்சாட்டப்பட்ட ஆசிரியை அருகிலுள்ள காவல் நிலையத்தில் தவறாமல் ஆஜராக வேண்டும், பாதிக்கப்பட்ட மாணவரையும் சாட்சிகளையும் அணுகக் கூடாது, மேலும் தனது கடவுச்சீட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், பாதுகாப்பு தரப்பு வழக்கறிஞர், “இரண்டு குழந்தைகளுக்குத் தாயான சம்பந்தப்பட்ட ஆசிரியர், மாதம் சுமார் 6,000 ரிங்கிட் மட்டுமே சம்பாதிக்கிறார்,” எனக் கூறி ஜாமீன் தொகையைக் குறைக்க வேண்டுகோள் விடுத்தார்.
இறுதியில், நீதிபதி ஒவ்வொரு குற்றச்சாட்டிற்கும் 5,000 ரிங்கிட் வீதம் ஜாமீன் நிர்ணயித்ததுடன், வழக்கின் அடுத்த விசாரணை ஜூலை 1 ஆம் தேதி நடைபெறும் என அறிவித்தார்.
- சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
May 20, 2026, 6:10 pm
டிக்டாக் பதிவுகளால் நேர்ந்த விபரீதம்: இருவருக்கு அபராதம்
May 20, 2026, 5:18 pm
மெர்சிங்கைச் சுற்றியுள்ள கடல் பகுதிகளை ஆய்வு செய்த மாமன்னர்
May 20, 2026, 4:24 pm
BN, GRS, GPS உறுதிமொழி; அன்வருக்கு பலம் சேரும் அரசியல் நகர்வு
May 20, 2026, 12:00 pm
சரவாக் காடு காப்பகங்களில் இரண்டு புதிய உயிரினங்கள் கண்டுபிடிக்கப்பட்டன
May 20, 2026, 11:06 am
