நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

BN, GRS, GPS உறுதிமொழி; அன்வருக்கு பலம் சேரும் அரசியல் நகர்வு

கோலாலம்பூர்:

பாரிசான் நேசனல் (பிஎன்), சபா மக்கள் கூட்டணி (ஜி.ஆர்.எஸ்), சரவாக் கட்சிகள் கூட்டணி (ஜி.பி.எஸ்) ஆகியவை, தற்போதைய பதவிக்காலம் முடியும் வரை ஒற்றுமை அரசாங்கத்துக்கு முழுமையான ஆதரவைத் தொடரப்போவதாக மீண்டும் உறுதியளித்துள்ளதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அமைச்சரவையில் அறிவித்தார்.

மடானி அரசாங்கத்தின் கூட்டணிக் கட்சிகள் தொடர்ந்து காட்டிவரும் அர்ப்பணிப்புக்கு பிரதமர் நன்றியையும் தெரிவித்ததாகத் தகவல் தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி ஃபாட்ஸில் கூறினார்.

“ஒற்றுமை அரசாங்கத்தின் நிலைத்தன்மையைப் பாதுகாக்கவும், தற்போதைய ஆட்சிக் காலம் நிறைவடையும் வரை அரசாங்கத்துடன் உறுதியாக நிற்கவும் கூட்டணிக் கட்சிகள் மீண்டும் உறுதிமொழி எடுத்துள்ளன.

இது வெறும் அரசியல் ஆதரவு அல்ல; மக்களின் நலனையும் நாட்டின் எதிர்காலத்தையும் முன்னிலைப்படுத்தும் முக்கிய அரசியல் செய்தியாகும்,” என்று அவர் வாராந்திர ஊடகச் சந்திப்பில் தெரிவித்தார்.

மேற்கு ஆசியாவில் நிலவும் பதற்றம், உலகளாவிய பொருளாதார சவால்களால் உருவாகும் தாக்கங்களைச் சமாளிப்பதில், இந்த அரசியல் ஒற்றுமை அரசாங்கத்திற்கு கூடுதல் பலமாக அமையும் என்றும் ஃபாஹ்மி குறிப்பிட்டார்.

அதேவேளை, அமைச்சரவைக் கூட்டத்தில் எந்த அமைச்சரின் ராஜினாமா குறித்தும் விவாதிக்கப்படவில்லை என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.

“ஜூன் 22ஆம் தேதி தொடங்கவுள்ள மக்களவைக் கூட்டத் தொடருக்கான தயாரிப்புகள் பற்றியே விவாதிக்கப்பட்டது. அதில் தங்கள் பதவியை விட்டு விலகிய இரு அமைச்சர்களின் இடங்கள் குறித்த விஷயமும் இடம்பெற்றது,” என்றார் அவர்.

பி.கே.ஆரிஇலிருந்து விலகி மலேசியா பெர்சாமா கட்சியில் இணைந்த முன்னாள் அமைச்சர்கள் டத்தோஸ்ரீ ரஃபிஸி ரம்லி, நிக் நஸ்மி நிக் அஹ்மத் ஆகியோரை குறிப்பிட்டே ஃபஹ்மி இந்த கருத்தை வெளியிட்டார்.

சங்கீர்த்தனா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset