செய்திகள் மலேசியா
திடீர் தேர்தல் சாத்தியக்கூறு குறித்து பிரதமர் பேசியதை அடுத்து, அன்வாருக்கு மாமன்னரை சந்திக்க அழைப்பு
பெட்டாலிங் ஜெயா:
மலேசிய மாமன்னர் மாட்சிமை தங்கிய சுல்தான் இப்ராஹிம் அவர்கள், நேற்றுப்ஞாயிற்றுக்கிழமை (மே 17) அன்று இஸ்தானா நெகாராவில் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அவர்களுக்குச் சந்திப்புக்கு அனுமதி அளித்தார்.
அரசாங்கத்தின் தலைமைச் செயலாளர் டான் ஸ்ரீ ஷம்சுல் அஸ்ரி அபு பக்கரும் இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டார் என்று மாட்சிமை தங்கிய மாமன்னரின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் வெளியிடப்பட்ட ஓர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒற்றுமை அரசாங்கத்திற்குள் பிளவுகள் தொடர்ந்து அதிகரித்தால், திடீர் பொதுத் தேர்தல் அறிவிக்கப்படலாம் என்று அன்வார் எச்சரித்த ஒரு நாள் கழித்து இந்தச் சந்திப்பு நடைபெற்றது.
முன்னதாக, கூட்டணிக்குள் உள்ள ஒப்பந்தங்கள் மதிக்கப்படாவிட்டால், தேர்தல்கள் ஜோஹோரைத் தாண்டி நெகிரி செம்பிலான், சிலாங்கூர், பஹாங், பினாங்கு போன்ற மாநிலங்களையும் உள்ளடக்கி விரிவடையக்கூடும் என்று பிரதமர் கூறியிருந்தார்.
பாகத்தான் தலைமையுடன் இதுகுறித்து விவாதிப்பதாக அன்வார் கூறினார். மேலும் திறமையான ஆட்சிக்கு அரசியல் ஸ்திரத்தன்மை முக்கியமானது என்றும் அவர் வலியுறுத்தினார்.
சனிக்கிழமை (மே 16) அன்று ஜோகூர் பாருவில் நடைபெற்ற பக்கத்தான் மாநாட்டில் உரையாற்றியபோது பிரதமர் இவ்வாறு கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 20, 2026, 6:10 pm
டிக்டாக் பதிவுகளால் நேர்ந்த விபரீதம்: இருவருக்கு அபராதம்
May 20, 2026, 5:18 pm
மெர்சிங்கைச் சுற்றியுள்ள கடல் பகுதிகளை ஆய்வு செய்த மாமன்னர்
May 20, 2026, 4:24 pm
BN, GRS, GPS உறுதிமொழி; அன்வருக்கு பலம் சேரும் அரசியல் நகர்வு
May 20, 2026, 12:14 pm
14 வயது மாணவருடன் பாலியல் அத்துமீறல்?: குற்றச்சாட்டுகளை மறுத்த ஆசிரியை
May 20, 2026, 12:00 pm
சரவாக் காடு காப்பகங்களில் இரண்டு புதிய உயிரினங்கள் கண்டுபிடிக்கப்பட்டன
May 20, 2026, 11:06 am
