செய்திகள் மலேசியா
எஸ்பிஎம் தேர்வு இன்னும் கட்டாயம்; மலாய், வரலாறு பாடங்களில் தேர்ச்சி பெற வேண்டும்: ஜம்ரி
புத்ராஜெயா:
நாட்டில் எஸ்பிஎம் தேர்வு இன்னும் கட்டாயமாகும் என்று உயர் கல்வியமைச்சர் டத்தோஸ்ரீ ஜம்ரி அப்துல் காதிர் கூறினார்.
எஸ்பிஎம் தேர்வில் உள்ள மலாய் மொழி, வரலாறு ஆகிய பாடங்கள், தேசியக் கல்வி முறைக்கு வெளியே பட்டம் பெற்ற மாணவர்கள் உட்பட பொது உயர்கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கான கட்டாயத் தேவைகளாகத் தொடர்கின்றன.
தஹ்ஃபிஸ் பள்ளிகள், தனியார் பள்ளிகள், சீனத் தனியார் இடைநிலைப் பள்ளிகளில் இருந்து மாணவர்கள் உயர் கல்வி கூடங்களில் கல்வி பயில்வதற்கான சேர்க்கைக்கு இது அவசியமாகும்.
இது தொடர்பான பல முடிவுகளுக்கு நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புக்கொள்ளப்பட்டது.
மாணவர் அந்தப் பாடப்பிரிவில் படித்தாலும், எஸ்பிஎம் தேர்வு இன்னும் கட்டாயமாக உள்ளது.
ஏனெனில், நமது UPU (UPUOnline அமைப்பு) மதிப்பீடு எஸ்பிஎம் தேர்வு முடிவுகளை அடிப்படையாகக் கொண்டது.
இதன் பொருள் மலேசியத் தேர்வுகள் வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்ட வரலாறு, மலாய் மொழிப் பாடங்களில் தேர்ச்சி பெறுவது உட்பட இரண்டு தேர்வுகளையும் எழுதியிருக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 15, 2026, 2:40 pm
விசா விலக்கு; மோசடிக்காரர்களை மலேசியாவிற்கு ஈர்க்கும் காரணங்களில் ஒன்றாகும்: ஐஜிபி
May 15, 2026, 2:38 pm
அதிகாரத்திற்காகப் போராட இது நேரமல்ல - பிரதமர்
May 15, 2026, 1:16 pm
பினாங்கு பள்ளி உணவகத்தில் எலி எச்சங்கள்: 14 நாள் மூடல் உத்தரவு
May 15, 2026, 12:09 pm
