செய்திகள் மலேசியா
அதிகாரத்திற்காகப் போராட இது நேரமல்ல - பிரதமர்
சிரம்பான்:
தற்போதைய உலகளாவிய நிச்சயமற்ற நிலையைத் தொடர்ந்து, அதிகாரத்திற்காகப் போராட இது நேரமல்ல.
மாறாகத் தலைவர்கள் மக்களின் பிரச்சினைகளில் கவனம் செலுத்த வேண்டும் என்று டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நினைவூட்டினார்.
சரியான நேரம் வரும்போது, அதிகாரத்தைத் தீர்மானிப்பதற்கான வாக்குகள் தேர்தல் களத்தின் மூலம் அளிக்கப்பட வேண்டும்.
முன்னதாக நெகிரி செம்பிலானில் ஏற்பட்ட அரசியல் குழப்பம் குறித்துக் கருத்துத் தெரிவிக்கும்போது அவர் இவ்வாறு கூறினார்.
ஆலோசனை செயல்முறையை நிறைவு செய்யுங்கள், நல்ல ஒருமித்த கருத்தை எட்டுங்கள்.
நெகிரி செம்பிலானும் இதில் இருந்து விலக்கப்படவில்லை.
எனவே, முடிவில்லாத அரசியல் குழப்பத்தைத் தாங்கி நின்றதில் காட்டிய விடாமுயற்சிக்கும் மனவுறுதிக்கும் முதலமைச்சர் டத்தோஸ்ரீ அமினுடின் ஹரூனை நான் பாராட்டுகிறேன்.
நமது நாடு பிரச்சனைகளைச் சந்தித்து வருகிறது. ஆனால் மக்களின் பிரச்சனைகளுக்கே முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
போராட்டத்தின் மீது அல்ல. இது அதற்கான நேரம் அல்ல. நமது அமைப்பில் ஒரு காலம் உண்டு. தேர்தல்கள்தான் அதற்கான களம்.
ஆனால், நாம் விழித்தெழ வேண்டிய நேரம் இது. மக்களுக்குக் கவனம் அளிக்கப்பட வேண்டும் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 15, 2026, 2:42 pm
எஸ்பிஎம் தேர்வு இன்னும் கட்டாயம்; மலாய், வரலாறு பாடங்களில் தேர்ச்சி பெற வேண்டும்: ஜம்ரி
May 15, 2026, 2:40 pm
விசா விலக்கு; மோசடிக்காரர்களை மலேசியாவிற்கு ஈர்க்கும் காரணங்களில் ஒன்றாகும்: ஐஜிபி
May 15, 2026, 1:16 pm
பினாங்கு பள்ளி உணவகத்தில் எலி எச்சங்கள்: 14 நாள் மூடல் உத்தரவு
May 15, 2026, 12:09 pm
