செய்திகள் மலேசியா
ஜூரு ஆற்றில் அதிகரித்து வரும் மாசுபாடு கவலை தருகிறது: பினாங்கு பயனீட்டாளர் சங்கத் தலைவர் மொஹைதீன் அப்துல் காதர்
பினாங்கு:
பினாங்கு மத்திய செபெராங் பிறையில் உள்ள கம்போங் குவாலா ஜூருவில் உள்ள சுமார் 100 சிப்பி என்ற கிளிஞ்சல்களை வளர்ப்பாளர்களும் மீனவர்களும், ஜூரு ஆற்றில் அதிகரித்து வரும் கடுமையான மாசுபாடு குறித்து கவலை கொண்டுள்ளனர் என பினாங்கு பயனீட்டாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
அப்பகுதியில் தொழிற்சாலைக் கழிவுகள், இறால் குளக் கழிவுகள் கொட்டப்படுவதால் ஏற்பட்டதாக சந்தேகிக்கப்படும் இந்தச் சம்பவம், ஆற்றில் வளர்க்கப்பட்ட கிளிஞ்சல்கள், மீன்கள் இருந்ததன் காரணமாக அவர்களின் வருமானத்தில் 50%-க்கும் மேல் பாதித்துள்ளது என்றார் அச்சங்கத்தின் தலைவர் முஹைதீன் அப்துல் காதர்.
பினாங்கு பயனீட்டாளர் சங்கம் நடத்திய ஒரு ஆய்வில் ஜூரு ஆற்றின் நீர் எப்போதும் கலங்கலாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
ஆற்றிற்கு அருகில் அமைந்துள்ள தொழிற்சாலைக் கழிவு, வடிகால் வாயில், இறால் குளக் கழிவு வடிகால் குழாய் ஆகியவற்றிலிருந்து வரும் கழிவுகளால் இது மாசுபட்டுள்ளதாக நம்பப்படுகிறது.
குவாலா ஜூரு மீனவர்கள் சங்கத்தின் தலைவர், வாஹித் ஒத்மான் கூற்றுப்படி, இந்த மாசுபாட்டிற்கான காரணங்களில் ஒன்றாக இருப்பதால், ஜூரு ஆற்றுடன் இணைக்கும் சுங்கை டெர்ஹாகாவில் உள்ள தொழிற்சாலைக் கழிவுக் கதவு நீண்ட காலமாக மூடப்பட்டிருந்தது. பிறகு, ஒரு வருடத்திற்கு முன்பு மீண்டும் திறக்கப்பட்டதிலிருந்து இந்தக் கடுமையான பிரச்சனை ஏற்பட்டு வருகிறது என்றார்.
ஜூரு ஆற்றில் இரசாயனக் கழிவுகள் பெரும்பாலும் காலையில் கொட்டப்படுவதால், ஆற்றின் நீர் கருமையாகவும் துர்நாற்றம் வீசுவதாகவும் இருப்பதாக அவர் கூறினார்.
இங்குள்ள மீனவர்களால், இறந்த பல கிளிஞ்சல்கள் மீன்கள் நீரின் மேற்பரப்பில் மிதப்பதைக் கண்டறியப்பட்டுள்ளன.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்தப் பிரச்சனையை விசாரித்து, இந்த மாசுபாட்டின் முக்கிய காரணத்தின் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஜூரு ஆற்றில் அதிகரித்து வரும் இந்த கவலைக்குரிய மாசுபாடு பிரச்சனையைச் சமாளிக்க, பினாங்கு அரசாங்கம், சுற்றுச்சூழல் துறை, நீர்ப்பாசனம் மற்றும் வடிகால் துறை, மீன்வளம் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் துறை ஆகியவை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பி.ப.சங்கம் வலியுறுத்துகிறது.
ஆற்றை மேலும் மாசுபாட்டிலிருந்து காப்பாற்ற, ஜூரு ஆற்றங்கரையில் கழிவுகளால் மாசடைந்த வடிகால்களை உடனடியாக மூட வேண்டும்.
இந்த மாசுபாட்டின் விளைவுகள் சுற்றுச்சூழலையும், இங்குள்ள மீனவர்களின் வருமான ஆதாரத்தையும் அச்சுறுத்துவது மட்டுமல்லாமல், மக்களின் உணவு விநியோகத்தையும் பாதிக்கின்றன.
நீண்ட காலமாக ஈடுபட்டு வரும் சிப்பி வளர்ப்பாளர்களுக்கும் மீனவர்களுக்கும், அவர்கள் தொடர்ந்து ஈடுபடுவதற்கு உதவிகளை வழங்கி அரசாங்கம் உதவ வேண்டும் என்று முஹைதீன் அப்துல் காதர் கேட்டுக்கொண்டார்.
- ஃபிதா
தொடர்புடைய செய்திகள்
May 15, 2026, 2:42 pm
எஸ்பிஎம் தேர்வு இன்னும் கட்டாயம்; மலாய், வரலாறு பாடங்களில் தேர்ச்சி பெற வேண்டும்: ஜம்ரி
May 15, 2026, 2:40 pm
விசா விலக்கு; மோசடிக்காரர்களை மலேசியாவிற்கு ஈர்க்கும் காரணங்களில் ஒன்றாகும்: ஐஜிபி
May 15, 2026, 2:38 pm
அதிகாரத்திற்காகப் போராட இது நேரமல்ல - பிரதமர்
May 15, 2026, 1:16 pm
பினாங்கு பள்ளி உணவகத்தில் எலி எச்சங்கள்: 14 நாள் மூடல் உத்தரவு
May 15, 2026, 12:09 pm
