நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

டெலிகிராம் முதலீட்டு மோசடியில் சிக்கிய அரசு ஊழியர் 6 மணி நேரத்தில் 99,000 ரிங்கிட் இழந்தார்

 கோலா திரங்கானு:

இரண்டு இணைய மோசடி  முதலீட்டுத் திட்டங்களில் பலியாகி திரங்கானுவைச் சேர்ந்த பெண் அரசு ஊழியர் ஒருவர் 99,276 ரிங்கிட்டை இழந்துள்ளார்.

 38 வயதுடைய பாதிக்கப்பட்டவர், மே 1 ஆம் தேதி, டெலிகிராம் பயன்பாட்டில் வெறும் ஆறு மணி நேரத்தில் அதிக லாபத்தை உறுதியளிக்கும் 'வெபுல் முதலீட்டுத் திட்டம்' விளம்பரத்திற்குப் பதிலளித்ததாக கோலா திரங்கானு மாவட்ட போலிஸ் தலைவர் ஏசிபி அஸ்லி முஹம்மத் நூர் தெரிவித்தார். 

"அவர் 1,000 ரிங்கிட் மதிப்புள்ள ஒரு தொடக்கப் பொதியைத் தேர்ந்தெடுத்தார். முதலீட்டு லாபத்தைத் திரும்பப் பெறுவதைச் செயல்படுத்துவதற்கான போர்வையில், பல கூடுதல் செலுத்துதல்களைச் செய்யுமாறு அவரிடம் கேட்கப்பட்டது.

"ஏமாற்றப்பட்ட பாதிக்கப்பட்டவர், மே 1 முதல் 7 வரையிலான காலப்பகுதியில், நான்கு வெவ்வேறு கணக்குகளுக்கு, 12 செலுத்துதல்களாக மொத்தம் 48,965 ரிங்கிட்டைச் செலுத்தினார்" என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

மே 11 ஆம் தேதி, அதே பயன்பாட்டின் மூலம், சன்வே டிரேட் என்ற மற்றொரு திட்டத்தில் பாதிக்கப்பட்டவர் முதலீடு செய்ததாக அஸ்லி கூறினார். 30 நிமிடங்களில் அதிக வருமானம் கிடைக்கும் என்று உறுதியளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மூன்று நாட்களில் மொத்தம் 50,311 ரிங்கிட் வங்கிப் பரிமாற்றங்களைச் செய்தார்.

"கூடுதல் செலவுகளுக்காகக் கூறப்பட்ட 38,527 ரிங்கிட் கூடுதலாகச் செலுத்துமாறு கேட்கப்பட்டதைத் தொடர்ந்து, தான் ஏமாற்றப்பட்டதாக பாதிக்கப்பட்டவர் சந்தேகித்தார்.

"நேற்று மதியம் 2.40 மணிக்கு அவர் போலிஸ் புகாரைப் பதிவு செய்தார். தண்டனைச் சட்டத்தின் பிரிவு 420-ன் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது" என்றார் அவர்.

-சங்கீர்த்தனா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset