நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கும்பல் கொள்ளையில் ஈடுபட்ட ஐந்து இந்தோனேசிய ஆண்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டனர்

பட்டர்வொர்த்:

கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில், பினாங்கைச் சுற்றியுள்ள கட்டுமானத் தளங்களில் உள்ள பல வீடுகளில், பாராங் கத்திகளைப் பயன்படுத்தி கும்பல் கொள்ளையில் ஈடுபட்ட மூன்று குற்றச்சாட்டுகளின் பேரில், ஐந்து இந்தோனேசிய ஆண்கள் இன்று இங்குள்ள செஷன் நீதிமன்றத்தில் குற்றத்தை ஒப்புக்கொண்டனர்.

குற்றஞ்சாட்டப்பட்ட ஃபௌஜி ஹிதாயத் (41), அஜிஸ் சுகந்தர் (40), டிடி சுகியார்டோ (28), அஸ்ஹாரி (35), சுஹர்மான் (44) ஆகியோர், நீதிபதி ரோஸ்லான் ஹமிட் முன்னிலையில் தங்களுக்கு எதிரான அனைத்துக் குற்றச்சாட்டுகளும் வாசிக்கப்பட்ட பின்னர், அவர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டனர்.

முதல் குற்றச்சாட்டின் படி, அனைத்து குற்றஞ்சாட்டப்பட்டவர்களும், கடந்த மார்ச் 11 ஆம் தேதி, அதிகாலை 3 மணியளவில், புக்கிட் மெர்தாஜாமில் உள்ள பாடாங் இபு குபாங் செமாங்கில் உள்ள ஒரு குவாரியில், ஓர் இந்தோனேசியர், ஓர் உள்ளூர் ஆணுக்கு எதிராக, ஆயுதம் ஏந்திய கும்பல் கொள்ளையில் ஈடுபட்டதாக ஒப்புக்கொண்டனர்.

இரண்டாவது குற்றச்சாட்டில், கடந்த மார்ச் 12 ஆம் தேதி, அதிகாலை 3.30 மணியளவில், புக்கிட் மெர்தாஜாமில் உள்ள தாமான் மாச்சாங் புபோக், ஜாலான் குளிமில் உள்ள திட்டம் 1645 கான்டெய்னர் வீட்டில், ஒன்பது வங்காளதேசிய ஆண்களை, ஒரு பாராங், கத்தியைப் பயன்படுத்தி, கொள்ளையடித்ததாக அவர்கள் மீண்டும் ஒப்புக்கொண்டனர்.

இதற்கிடையில், மூன்றாவது குற்றச்சாட்டில், இங்குள்ள சுங்கை பாகாப்பில் உள்ள ஜாலான் கம்போங் பெங்காலனுக்கு அப்பாற்பட்ட இலக்கம் 610, 589, 579, 577, 105-இல், கடந்த ஏப்ரல் 9 ஆம் தேதி, அதிகாலை 1.30 மணியளவில், ஒரு மியான்மர் ஆண், ஒரு பெண் மீது கும்பல் கொள்ளையில் ஈடுபட்டதாக மூன்று குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் ஒப்புக்கொண்டனர்.

தண்டனைச் சட்டத்தின் பிரிவு 395-ன் கீழ், அதே சட்டத்தின் பிரிவு 397-உடன் இணைந்து, இந்தக் குற்றச்சாட்டுகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. குற்றம் நிரூபிக்கப்பட்டால், 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, பிரம்படி விதிக்கப்படலாம்.

துணை வழக்குத் தொடரும் அதிகாரி நாதிரா அப்துல் ரஹீம் தலைமையில் வழக்குத் தொடர்பு மேற்கொள்ளப்பட்டது. குற்றஞ்சாட்டப்பட்ட அனைவரும் வழக்கறிஞர் எவராலும் பிரதிநிதித்துவப்படுத்தப்படவில்லை.

நடவடிக்கைகளின் போது, வழக்கின் உண்மைகளைச் சமர்ப்பிப்பதற்கு சுமார் இரண்டு வார கால அவகாசத்தை நாதிரா கோரினார். மேலும், மூன்று குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கும் எந்தவொரு ஜாமீனையும் வழங்க முன்வரவில்லை.

வழக்கின் உண்மைகள், தண்டனையை வாசிப்பதற்காக அடுத்த ஜூன் 10ஆம் தேதியை நீதிமன்றம் நிர்ணயித்தது. மேலும், அடுத்த நடவடிக்கைகள் வரை காத்திருக்கும் போது, அனைத்து குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கும் ஜாமீன் வழங்க மறுத்தது.

கடந்த ஏப்ரல் 10 ஆம் தேதி, பினாங்கைச் சுற்றியுள்ள கட்டுமானத் தளப் பகுதிகளில் ஐந்து ஆயுதக் கொள்ளை வழக்குகள் தொடர்பாக விசாரணைக்கு உதவும் வகையில், ஒரு ஜோடி காதலர்கள் உட்பட 11 இந்தோனேசியர்கள் ஏழு நாட்கள் தடுத்து வைக்கப்பட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

மூன்று தனித்தனி இடங்களில் நடத்தப்பட்ட பல சோதனைகளில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாகத் தெரிகிறது.

-சங்கீர்த்தனா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset