நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பினாங்கு பள்ளி உணவகத்தில் எலி எச்சங்கள்: 14 நாள் மூடல் உத்தரவு

ஜார்ஜ்டவுன்:

சுகாதார ஆய்வில், வளாகத்தில் எலி எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பள்ளியின் உணவகம் மூடப்பட உத்தரவிடப்பட்டுள்ளது.

 மூடல் உத்தரவு நேற்று மதியம் முதல் மே 27 வரை, பதினான்கு நாட்களுக்கு உடனடியாக அமலுக்கு வந்தது என்று பினாங்கு கல்வி இயக்குநர் முஹம்மத ட்ஸியாவுதீன் மாட் சாத் தெரிவித்தார்.

"உணவகத்தில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள், கண்காணிப்பில், பயன்படுத்தப்படாத குளிர்சாதனப் பெட்டியின் பின்னால் உள்ள தரையில் எலி எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. 1983 ஆம் ஆண்டின் உணவுச் சட்டத்தின் பிரிவு 11-இன் கீழ், சுகாதாரமற்ற உணவு வளாகத்திற்கான மூடல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது" என்று இன்று தொடர்பு கொள்ளப்பட்ட போது அவர் பெர்னாமா செய்தி நிறுவனத்திடம் கூறினார்.

இதுவரை, அந்தப் பள்ளியில் மாணவர்கள் அல்லது ஆசிரியர்களை உள்ளடக்கிய நச்சுணவு பாதிப்பு எதுவும் பதிவாகவில்லை என்றார் அவர்.

மூடல் காலம் முழுவதும், ஒரு விற்பனையாளரால் மாணவர்களுக்கு உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

-சங்கீர்த்தனா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset