நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சரவாக்கில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் முறியடிக்கப்பட்டது; 23 பேர் கைது: டத்தோ குமார்

கோலாலம்பூர்:

சரவாக்கில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் முறியடிக்கப்பட்டதுடன் 23 பேர் கைது செய்யப்பட்டனர்.

புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறை இயக்குநர் டத்தோ எம். குமார் இதனை கூறினார்.

கடந்த ஏப்ரல் 19 முதல் 23 வரை ஆபரேஷன் புசாக் மெரா ன்ற சிறப்பு நடவடிக்கையில் 23 சந்தேக நபர்கள் போலிசாரால் கைது செய்யப்பட்டனர்.

இதைத் தொடர்ந்து, சரவாக்கில் ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலை போலிஸ் வெற்றிகரமாக முறியடித்துள்ளது.

இந்தக் கும்பல் சரவா முழுவதும் வன்முறைக் குற்றங்களில், குறிப்பாக காயங்களை ஏற்படுத்தும் கொள்ளைகள், தீவைப்பு, கடுமையான காயங்களை ஏற்படுத்துதல், ஆயுதங்களைப் பயன்படுத்தி கலவரங்கள் மிரட்டிப் பணம் பறித்தல் போன்றவற்றில் தீவிரமாக ஈடுபட்டு வந்தது.

41 வயதான உள்ளூர்வாசி ஒருவரால் வழிநடத்தப்பட்ட இந்தக் கும்பலை, 19 முதல் 44 வயதுக்குட்பட்ட 26 உறுப்பினர்கள் இருந்ததாகவும், அவர்கள் அனைவரும் மீண்டும் மீண்டும் குற்றம் செய்பவர்கள் என்றும் அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்


தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset