நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

புதிய கே.டி.எம் செகாம்புட் உத்தாரா நிலையம் 90,000 பயணிகளுக்குப் பயனளிக்கும்: அமைச்சர் அந்தோனி லோக்

கோலாலம்பூர்:

கோலாலம்பூரில் புதிதாகத் தொடங்கப்பட்ட கே.டி.எம் செகாம்புட் உத்தாரா நிலையம், 90,000 பயணிகளுக்குப் பயனளிக்கும் என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் கூறினார்.

செகாம்புட், கெப்போங், ஜின்ஜாங், மோன்ட் கியாரா பகுதிகளை இந்த நிலையம் உள்ளடக்கும் என்று அவர் தெரிவித்தார். எதிர்காலத்தில், இப் பகுதியின் மக்கள்தொகை 100,000 க்கும் மேல் அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

"இந்த நிலையத்தின் கட்டுமானத்திற்கான திட்டமிடல் எதிர்வினையாற்றக்கூடியதாக இல்லை, மாறாக தரவு சார்ந்தது, நீண்டகாலத் தேவைகள், பயன்பாட்டு முறைகளைக் கருத்தில் கொண்டது என்பதை இது தெளிவாகக் காட்டுகிறது" என்று இன்று செகாம்புட்டில் நிலையத்தைத் தொடங்கி வைத்த போது அவர் கூறினார்.

நிலையத்திற்கு, உச்ச நேரங்களில் ஒவ்வொரு திசையிலும் ஒரு மணி நேரத்திற்கு 8,000 பயணிகள் வரை செல்லும் திறன் உள்ளது என்றும், வருடத்திற்கு கிட்டத்தட்ட 580,000 பயணிகளைக் கையாளும் என மதிப்பிடப்பட்டுள்ளதாகவும் லோக் குறிப்பிட்டார்.

-சங்கீர்த்தனா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset