நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஜோ லோ அமெரிக்காவிடம் மன்னிப்புக் கோருவதற்கு மலேசியா எதிர்ப்பு தெரிவிக்கவில்லை: பிரதமர் அன்வார்

சிரம்பான்:

ஜோ லோ அமெரிக்காவிடம் மன்னிப்புக் கோருவதற்கு மலேசியா எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை கூறினார்.

தலைமறைவான தொழிலதிபர் ஜோ லோ, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிடம் கருணை கோரினால்.மலேசியா அதற்கு எதிர்ப்பு தெரிவிக்காது.

இந்த விவகாரம் அமெரிக்க அரசாங்கத்தின் உள் விவகாரமாகும். ஆக இதுகுறித்து மலேசியா அதிகாரப்பூர்வ நடவடிக்கை எடுக்காது.

நாங்கள் அந்தப் பாதையை ஆதரிக்கவில்லை. ஆனால் நிச்சயமாக அது அமெரிக்கா, அவர்களுடைய சொந்த விஷயம்.

2026 தேசிய இளைஞர் தினக் கொண்டாட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் அவர் இவ்வாறு கூறினார்.

ஜோ லோவுக்குப் பொதுமன்னிப்பு வழங்கப்பட்டால், அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து மலேசிய அரசாங்கம் அமெரிக்க அதிகாரிகளிடம் ஏதேனும் அதிகாரப்பூர்வமாக முறையிடுமா என்பது குறித்து டத்தோஸ்ரீ அன்வார் கருத்துத் தெரிவித்தார்.

மலேசியாவின் பார்வையில் இந்த விவகாரம் ஒரு பிரச்சினையே அல்ல என்றும் பிரதமர் விவரித்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset