செய்திகள் மலேசியா
விசா விலக்கு; மோசடிக்காரர்களை மலேசியாவிற்கு ஈர்க்கும் காரணங்களில் ஒன்றாகும்: ஐஜிபி
கோலாலம்பூர்:
விசா விலக்கு மோசடிக்காரர்களை மலேசியாவிற்கு ஈர்க்கும் காரணங்களில் ஒன்றாக உள்ளது.
தேசிய போலிஸ்படைத் தலைவர் டத்தோஸ்ரீ காலிட் இஸ்மாயில் இதனை கூறினார்.
நாட்டில் உள்ள விசா விலக்குக் கொள்கையானது, உலகெங்கிலும் உள்ள மோசடியாளர்களுக்கு இந்த நாட்டை ஒரு கவர்ச்சிகரமான இடமாக மாற்றும் காரணகளில் ஒன்றாகும்.
இந்தக் கொள்கை, வெளிநாட்டுக் குற்றவாளிகள் இந்த நாட்டில் செயல்படுவதை எளிதாக்குகிறது.
சர்வதேச மோசடிக் கும்பல்கள் ஏன் மலேசியாவை ஒரு இடைவழி மையமாக அல்லது செயல்பாட்டுத் தளமாக அடிக்கடி பயன்படுத்துகின்றன என்ற கேள்விக்கு அவர் பதிலளித்தார்.
இருப்பினும், மற்ற காரணங்களைப் பற்றி அவர் விரிவாகக் கூறவில்லை.
இருப்பினும், வெளிநாட்டினர், சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்குள் நுழைவதைக் கண்காணிக்க போலிஸ், குடிநுழைவுத் துறை, பிற அமலாக்க முகமைகளுடன் நெருக்கமாகப் பணியாற்றி வருவதாக அவர் கூறினார்.
முன்னதாக அனைத்துலக இணையவழி மோசடிக் கும்பலில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் மொத்தம் 187 வெளிநாட்டினர், உள்ளூர்வாசிகள் மே 6, 7 ஆகிய தேதிகளில் நடத்தப்பட்ட சோதனைகளில் கைது செய்யப்பட்டதாக இஸ்மாயில் காலித் தெரிவித்தார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 15, 2026, 2:42 pm
எஸ்பிஎம் தேர்வு இன்னும் கட்டாயம்; மலாய், வரலாறு பாடங்களில் தேர்ச்சி பெற வேண்டும்: ஜம்ரி
May 15, 2026, 2:38 pm
அதிகாரத்திற்காகப் போராட இது நேரமல்ல - பிரதமர்
May 15, 2026, 1:16 pm
பினாங்கு பள்ளி உணவகத்தில் எலி எச்சங்கள்: 14 நாள் மூடல் உத்தரவு
May 15, 2026, 12:09 pm
