நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மோட்டார் சைக்கிள் ஓட்டிய தம்பதியினரைக் கொலை செய்த குற்றச்சாட்டில் கல்லூரி மாணவர் மீது வழக்குப் பதிவு

கோலாலம்பூர்:

இந்த மாத தொடக்கத்தில், மோட்டார் சைக்கிள் ஓட்டிய ஒரு தம்பதியினரைக் கொலை செய்த இரண்டு குற்றச்சாட்டுகளின் பேரில், ஒரு கல்லூரி மாணவர் இன்று இங்குள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டார்.

24 வயதுடைய டேனிஷ் ராமன் குமார் குமரேசன், மாஜிஸ்திரேட் நூருல் இஸ்ஸா ஹசன் பஸ்ரி முன்னிலையில் குற்றச்சாட்டுகள் வாசிக்கப்பட்ட பின்னர், அதைப் புரிந்துகொண்டதாகத் தலையசைத்தார்.

கொலை வழக்கு உயர் நீதிமன்றத்தின் அதிகார வரம்பிற்குட்பட்டது என்பதால், எந்தவொரு வாக்குமூலமும் பதிவு செய்யப்படவில்லை.

கடந்த மே 2 ஆம் தேதி, அதிகாலை 5.30 மணியளவில், கள.எல்.சி.சி-யில் இருந்து அம்பாங் பாயிண்ட் நோக்கிச் செல்லும் ஜாலான் அம்பாங்கில், 61 வயதுடைய ஏ. துரைசிங்கம், அவரது 56 வயதுடைய மனைவி ஏ. மேனகா ஆகியோரின் மரணத்தை வேண்டுமென்றே ஏற்படுத்தியதாக அந்த இளைஞர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

தண்டனைச் சட்டத்தின் பிரிவு 302-ன் கீழ் இந்தக் குற்றச்சாட்டுகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. குற்றம் நிரூபிக்கப்பட்டால், மரண தண்டனை அல்லது அதிகபட்சம் 40 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், மரண தண்டனை விதிக்கப்படாவிட்டால், குறைந்தபட்சம் 12 பிரம்படிகளும் விதிக்கப்படலாம்.

பிரேத பரிசோதனை அறிக்கைக்காக, வழக்கின் மறு பரிசீலனைக்கு ஆகஸ்ட் 17 ஆம் தேதியை நீதிமன்றம் நிர்ணயித்தது.

துணை வழக்குத் தொடரும் அதிகாரிகள் ஃபைசால் நூர் ஹாடி, முஹம்மத் ஷரிஸாட் அமாடன் ஆகியோர் தலைமையில் வழக்குத் தொடர்பு மேற்கொள்ளப்பட்டது. குற்றஞ்சாட்டப்பட்டவர் வழக்கறிஞர்கள் தேவிந்தர் கவுர் தலிவால், மன்ஷீல் கவுர் ஆகியோரால் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்டார்.

அம்பாங் க்ளெனேகல்ஸ் மருத்துவமனைக்கு அருகில் நிகழ்ந்த சம்பவத்தில், சம்பந்தப்பட்ட தம்பதியினர் ஓட்டிய மோட்டார் சைக்கிள், கட்டுப்பாட்டை இழந்த ஒரு காரால் மோதப்பட்டதாக நம்பப்படுகிறது.

ஆரம்பக் கட்ட விசாரணையில், 24 வயதுடைய அந்த இளைஞரால் ஓட்டப்பட்ட கார், பாதிக்கப்பட்டவர்களின் மோட்டார் சைக்கிளின் பின்புறத்தில் மோதியதாகக் கூறப்படுகிறது. இதன் விளைவாக, தலையில் ஏற்பட்ட கடுமையான காயங்கள் காரணமாக அந்தத் தம்பதியினர் உயிரிழந்தனர்.

கோலாலம்பூர் போக்குவரத்து விசாரணை, அமலாக்கத் துறையின் (ஜே.எஸ்.பி.டி) தலைவர் உதவி ஆணையாளர் முஹம்மத் ஜாம்சூரி முஹம்மத் இசா, இரத்தம், சிறுநீர் மாதிரிகள் ஏற்கனவே எடுக்கப்பட்டு, மேலதிக பகுப்பாய்விற்காக வேதியியல் துறைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகக் கூறியதாகத் தெரிகிறது.

-சங்கீர்த்தனா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset