நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

புத்ராஜெயா இடைநிலைப்பள்ளியின் மண்டபக் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் யாருக்கும் எந்தக் காயமும் ஏற்படவில்லை: ஃபட்லினா

கோலாலம்பூர்:

நேற்று மாலை, புத்ராஜெயாவின் பிரசிங்ட் 14(1) தேசிய இடைநிலைப்பள்ளியில் உள்ள மண்டபக் கிடங்கை உள்ளடக்கிய தீ விபத்தில், யார் ஒருவருக்கும் எந்தக் காயமும் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படவில்லை என்று புத்ராஜெயா கூட்டாட்சிப் பகுதி கல்வித் துறை (JPWP) தெரிவித்துள்ளது.

JPWP புத்ராஜெயா ஒரு அறிக்கையில், சம்பவத்தின் காரணத்தைக் கண்டறிவதற்காக, அதிகாரிகள் தற்போது மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்துள்ளது.

அந்த அறிக்கையின்படி, கல்வி அமைச்சர் ஃபட்லினா சிடேக், சம்பவ இடத்திற்குச் சென்று ஆய்வு செய்தார். மேலும், உடனடியாக விநியோகிப்பதற்காக, 100,000 ரிங்கிட் ஆரம்ப ஒதுக்கீட்டை அறிவித்தார்.

சுத்தம் செய்யும் பணிகள், பிற ஆரம்ப பணிகள் (தீயால் பாதிக்கப்பட்ட பயன்பாட்டு வசதிகளை மீண்டும் இணைப்பது, தீப்பிடித்த பகுதி, அருகிலுள்ள கட்டிடங்களில் சிறிய பழுதுபார்ப்புகள், பிற தொடர்புடைய பணிகள்) ஆகியவற்றின் நோக்கத்திற்காகவே அந்த ஒதுக்கீடு என்று JPWP தெளிவுபடுத்தியுள்ளது.

"பள்ளியின் பாதுகாப்பு, நலன், நல்வாழ்வை உறுதி செய்வதற்காக, பாதிக்கப்பட்ட பகுதிகள், அருகிலுள்ள பகுதிகளை மூடுவதற்கு JPWP புத்ராஜெயா உடனடி நடவடிக்கை எடுத்துள்ளது" என்று அந்த அறிக்கை மேலும் தெரிவித்துள்ளது.

-சங்கீர்த்தனா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset