செய்திகள் மலேசியா
விபத்தில் சிக்கிய லோரி உட்பட 3 வாகனங்கள் தீப்பிடித்து எரிந்தன
ஜார்ஜ்டவுன்:
ஜார்ஜ்டவுனின் நிகழ்ந்த விபத்தில் சிக்கிய லோரி உட்பட 3 வாகனங்கள் தீப்பிடித்து எரிந்தன.
பினாங்கு தீயணைப்பு, மீட்புத் துறையின் உதவி இயக்குநர் ஜான் சகுன் பிரான்சிஸ் இதனை கூறினார்.
இன்று இங்குள்ள ஜாலான் மஸ்ஜித் நெகரி, உடினி சாலை சுரங்கப்பாதையில் இந்த விபத்து நிகழ்ந்தது.
நடந்த இந்த விபத்தில் சிக்கிய மூன்று வாகனங்கள் தீப்பிடித்தன.
கான்கிரீட் தூண்களை ஏற்றிச் சென்றதாகக் கருதப்படும் ஒரு லோரி, தொழிலாளர்களின் வேன், ஒரு கார் ஆகியவை இந்த விபத்தில் சம்பந்தப்பட்டிருந்தன.
காலை 7.33 மணிக்குத் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
விபத்தில் சிக்கிய அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாக அவர் இன்று ஒரு ஊடக அறிக்கையில் தெரிவித்தார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 20, 2026, 6:10 pm
டிக்டாக் பதிவுகளால் நேர்ந்த விபரீதம்: இருவருக்கு அபராதம்
May 20, 2026, 5:18 pm
மெர்சிங்கைச் சுற்றியுள்ள கடல் பகுதிகளை ஆய்வு செய்த மாமன்னர்
May 20, 2026, 4:24 pm
BN, GRS, GPS உறுதிமொழி; அன்வருக்கு பலம் சேரும் அரசியல் நகர்வு
May 20, 2026, 12:14 pm
14 வயது மாணவருடன் பாலியல் அத்துமீறல்?: குற்றச்சாட்டுகளை மறுத்த ஆசிரியை
May 20, 2026, 12:00 pm
சரவாக் காடு காப்பகங்களில் இரண்டு புதிய உயிரினங்கள் கண்டுபிடிக்கப்பட்டன
May 20, 2026, 11:06 am
