செய்திகள் மலேசியா
3 நாட்களாக வேலைக்கு வராததால் அம்பலமான கொலை: நண்பர் தேடிச் சென்றபோது இரத்த வெள்ளத்தில் கிடந்த தொழில்நுட்பவியலாளர்
ஜொகூர் பாரு:
நேற்று முன்தினம் இரவு, பிரிமா தெப்ராவில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் பலமுறை குத்திக் கொல்லப்பட்டதாக நம்பப்படும் நிலையில், 33 வயதான தொழில்நுட்ப வல்லுநர் ஒருவர் இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார்.
விசாரணைக்கு உதவுவதற்கும், முக்கியமான ஆதாரங்களைச் சேகரிப்பதற்கும், குடியிருப்பாளர்கள் தங்களது சி.சி.டி.வி பதிவுகளை ஒப்படைக்குமாறு போலிஸார் கோரியுள்ளனர்.
சம்பந்தப்பட்ட குடியிருப்பு வளாகத்தில் உள்ள பெரும்பாலான சி.சி.டி.வி கேமராக்கள் பராமரிப்புப் பணிகளில் இருப்பதாகக் கூறப்படுவதாலும், பிரதான வெளியேற்றக் கதவில் உள்ள கேமராக்கள் மட்டுமே செயல்படுவதாலும், தனிப்பட்ட சி.சி.டி.வி பதிவுகள் தேவைப்படுகின்றன.
அந்த குடியிருப்பில் அந்த ஆணின் உடல் இரத்தம் தோய்ந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இரவு 11.12 மணிக்கு ஒரு புகார் பெறப்பட்டதை ஜொகூர் பாரு தெற்கு மாவட்ட போலிஸ் தலைவர் உதவி ஆணையாளர் ராவுப் சேலமத், உறுதிப்படுத்தினார்.
"இரவு 10.50 மணியளவில், பாதிக்கப்பட்டவர் இரத்தம் தோய்ந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார். அந்தச் சம்பவத்தில் பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் ஒரு கத்தியும் பாதிக்கப்பட்டவரின் அருகில் கண்டுபிடிக்கப்பட்டது" என்றார் அவர்.
பாதிக்கப்பட்டவரின் சக ஊழியர் ஒருவர், அடுக்ககத்தின் பாதுகாப்புக் காவலரின் உதவியைக் கோரியதைத் தொடர்ந்தே, பாதிக்கப்பட்டவர் கண்டுபிடிக்கப்பட்டதாக ஒரு குடியிருப்பாளர் தெரிவித்தார்.
சல்லே என்று அழைக்கப்படும் பாதிக்கப்பட்டவர், மூன்று நாட்களாக வேலைக்கு வரவில்லை என்று நம்பப்படுகிறது.
காவலரின் உதவியுடன், அவர்கள் பிளாக் ஏ-வில் உள்ள அவரது வீட்டிற்குச் சென்றனர்.
சம்பந்தப்பட்ட வீட்டின் வாயில் கதவும், முதன்மைக் கதவும் சற்றுத் திறந்திருப்பதை அவர்கள் கண்டனர்.
"அவர்கள், பாதிக்கப்பட்டவர் தரையில் கிடப்பதைக் கண்டனர், உடனடியாக போலிஸாருக்குத் தெரிவித்தனர். அவர் பலமுறை குத்தப்பட்டதாக எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. கண் பகுதி உட்பட அவரது உடலில் கிட்டத்தட்ட ஒன்பது குத்துகள் என்று நம்பப்படுகிறது" என்றார் அவர்.
மே 11 முதல் மே 12 வரை, காலை 6 மணி முதல் 9 மணிக்குள், குடியிருப்பாளர்கள் வாகன நிறுத்துமிடப் பகுதியில் உள்ள டாஷ்கேம் பதிவுகள் உட்பட அனைத்து பதிவுகளை ஒப்படைக்குமாறு குடியிருப்பு நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
May 20, 2026, 6:10 pm
டிக்டாக் பதிவுகளால் நேர்ந்த விபரீதம்: இருவருக்கு அபராதம்
May 20, 2026, 5:18 pm
மெர்சிங்கைச் சுற்றியுள்ள கடல் பகுதிகளை ஆய்வு செய்த மாமன்னர்
May 20, 2026, 4:24 pm
BN, GRS, GPS உறுதிமொழி; அன்வருக்கு பலம் சேரும் அரசியல் நகர்வு
May 20, 2026, 12:14 pm
14 வயது மாணவருடன் பாலியல் அத்துமீறல்?: குற்றச்சாட்டுகளை மறுத்த ஆசிரியை
May 20, 2026, 12:00 pm
சரவாக் காடு காப்பகங்களில் இரண்டு புதிய உயிரினங்கள் கண்டுபிடிக்கப்பட்டன
May 20, 2026, 11:06 am
