செய்திகள் சிந்தனைகள்
மனோ இச்சையை பின்பற்றுகிறவன் ஆட்டுமந்தை போன்று யாருக்குப் பின்னால் வேண்டுமென்றாலும் செல்வான் -வெள்ளிச் சிந்தனை
அருள்மறை குர்ஆன் கூறுகிறது:
"அவர்களுக்குப் பிறகு, சீர்கெட்ட மக்கள் அவர்களுடைய பிற்சந்ததிகளாகத் தோன்றினார்கள். அவர்கள் தொழுகையை வீணாக்கினார்கள். மன இச்சைகளைப் பின்பற்றினார்கள்! அத்தகையவர்கள் தங்கள் வழிகேட்டின் தீயவிளைவை விரைவில் சந்திப்பார்கள்”. (19:59)
எவ்வளவு ஆழமான பொருள் பொதிந்த வசனம் இது. வாழ்கால சமூகத்தின் மனோநிலையை அப்படியே படம் பிடித்துக் காட்டுகிறது:
சமூக வீழ்ச்சிக்கான அடிப்படை காரணங்களையும், அதனால் ஏற்படும் விளைவுகளையும் மிகத் தெளிவாக இது எச்சரிக்கிறது.
ஈமானும் பண்பாடும் ஒரு தலைமுறையோடு முடிந்துவிடக் கூடாது. அடுத்த தலைமுறைக்குச் சரியான வழிகாட்டுதலைக் கொண்டு சேர்ப்பது ஒவ்வொருவரின் கடமையாகும்.
இறைவனுக்கும் அடியானுக்கும் இடையிலான முதன்மைத் தொடர்பே தொழுகைதான். அதைத் துண்டிக்கும்போது ஒரு சமூகம் தனது ஆன்மீக பலத்தை இழந்து சீரழிகிறது.
தொழுகையை எப்போது ஒருவன் அலட்சியப்படுத்துகிறானோ, அப்போது அவனுடைய உள்ளத்தில் மன இச்சைகள் (Desires) குடிபுகுகின்றன.
மனோ இச்சையை பின்பற்றுகிறவன் ஆட்டுமந்தை போன்று யாருக்குப் பின்னால் வேண்டுமென்றாலும் செல்வான்.
அத்தகைய தீய செயல்களுக்கான தண்டனை மறுமையில் மட்டுமல்ல, இம்மையிலும் கிட்டும். மன அமைதியற்ற வாழ்வு, சமூகச் சீரழிவு, முற்றிலும் தகுதியற்ற தலைமை போன்ற வடிவங்களிலும் வரும் என்பதை இது நினைவூட்டுகிறது.
சுருக்கமாக…
ஒரு சமூகம் சீரழிவதற்குக் காரணம் பொருளாதார வீழ்ச்சியோ தொழில்நுட்பக் குறைபாடோ அல்ல; மாறாக இறைத் தொடர்பை அலட்சியப்படுத்துவதும், தறிகெட்ட மன இச்சைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதுமே ஆகும்.
இதனால் ஏற்படும் தீயவிளைவை வாழும் காலத்திலேயே மக்கள் சந்திப்பார்கள் என்ற எச்சரிக்கையும் இதில் உள்ளது.
- நூஹ் மஹ்ழரி
தொடர்புடைய செய்திகள்
September 15, 2026, 12:01 am
நினைத்தது ஒன்று! நடந்தது வேறொன்று: பிரிக்ஸ் மாநாடு ஒரு கண்ணோட்டம்
September 11, 2026, 6:33 am
உடல் பருமன் என்பது வெறும் தோற்றப் பிரச்சனையா? - வெள்ளிச் சிந்தனை
September 4, 2026, 8:14 am
உலக வாழ்க்கையை அல்லாஹ் ஏன் தண்ணீருடன் ஒப்பிடுகிறான்? - வெள்ளிச் சிந்தனை
August 31, 2026, 12:36 pm
நேபாள் வெள்ளம் திட்டமிட்ட சதியா?
August 28, 2026, 7:29 am
பெண்களுக்கு கண்ணியம் வழங்கியவர் எவர்? - வெள்ளிச் சிந்தனை
August 21, 2026, 7:35 am
வாழ்க்கைக் கதைகள் நமக்குத் தரும் பாடங்கள் - வெள்ளிச் சிந்தனை
August 17, 2026, 9:49 am
தொப்பையால் ஆபத்து - ஆரோக்கிய சிந்தனை
August 14, 2026, 9:39 am
அப்பாஸிய சகாப்தம் மார்க்க அறிஞர்களை கௌரவித்த உன்னதமான காலகட்டம் - வெள்ளிச் சிந்தனை
August 7, 2026, 9:43 am
வாழும் காலம் எல்லாம் தமிழுக்காகவே வாழ்ந்த இறையருட்கவிஞர் சீனி நைனா முகம்மது நினைவுநாள்
August 7, 2026, 7:17 am
