செய்திகள் சிந்தனைகள்
நிராகரிப்பாளர்ளாக இருந்தாலும் அவர்களிடம் குறைந்தபட்ச கண்ணியம் இருந்தது - வெள்ளிச் சிந்தனை
1. குறைஷிகள் நபிகளாரைக் கொலை செய்யச் சென்றபோது, அவர் ஃபஜ்ர் தொழுகைக்காக வெளியே வருவார் என்று எதிர்பார்த்து இரவு முழுவதும் வீட்டு வாசலில் நின்றுகொண்டிருந்தனர்.
எந்த நேரத்திலும் அவர்களால் வீட்டிற்குள் புகுந்து, உள்ளே இருந்த அனைவரையும் அழித்திருக்க முடியும். ஆனால் அவர்கள் அவ்வாறு செய்யவில்லை.
அவர்களில் ஒருவன் அந்த யோசனையை கூறியபோது அபூ ஜஹ்ல் அளித்த பதில்:
"நாம் மதில்களில் ஏறி, முஹம்மதின் மகள்களின் கண்ணியத்தை மீறிவிட்டோம் என்று அரபுகள் குறை சொல்வதற்கா?"
குறைஷிகள் நிராகரிப்பாளர்ளாக இருந்தாலும் அவர்களிடம் குறைந்தபட்ச கண்ணியம் இருந்தது. அந்த வீட்டில் பெண்கள் இருக்கிறார்கள், வீட்டிற்குள் புகுந்து அவர்களை வெளியே இழுத்து அந்தரங்கத்தை மீறுவது ஏற்றுக்கொள்ள முடியாதது என்று அறிந்தே இருந்தனர்.
2. அபூ ஜஹ்ல் ஆத்திரத்தில் அஸ்மா (ரலி) அவர்களின் முகத்தில் அடித்தான். தவறை உணர்ந்து உடனே, "இதை மறைத்துக்கொள். வெளியே சொல்லி என்னை அவமானப்படுத்தி விடாதே!" என்று கெஞ்சினான்.
3. நிராகரிப்பாளராக இருந்த அபூ சுஃப்யான் ரோம் தேசம் சென்றபோது, பேரரசர் ஹெராக்லியஸ், முஹம்மது நபியைப் பற்றி விசாரிப்பதற்காக அவரை அழைத்தார்.
அரசர் கேட்டார்: "அவர் பொய் சொல்வாரா? அவர் துரோகியா? அவர் கொலை செய்திருக்கிறாரா?"
அபூ சுஃப்யான்:"அல்லாஹ் மீது ஆணை! நான் பொய் சொன்னதாகக் குற்றம் சாட்டப்படும் அவமானம் மட்டும் இல்லையென்றால், அவரைப் பற்றி பொய் சொல்லியிருப்பேன்."
இங்கு அபூ ஜஹ்ல் அல்லது அபூ சுஃப்யானின் நிலைப்பாட்டில் எந்த மகத்துவமும் இல்லை. மகத்துவம் அந்தச் சமூகத்திலேயே உள்ளது.
அன்று.. இஸ்லாத்திற்கு முந்தைய, இறைநம்பிக்கையற்ற சமூகத்தில்கூட, ஒழுக்கமும் கண்ணியமும் இருந்தன.
இன்றோ.. அரசியல் பிளவுகளால் பொது இடங்களில் திட்டுவதும் அவமானப் படுத்துவதும் சர்வ சாதாரணமாக நடக்கிறது.
நாம் ஒரு முஸ்லிமுடன் முரண்பட்டால், அவரை அவமானப்படுத்துகிறோம். கற்பனைக் கதைகளைக் கட்டவிழ்த்து விடுகிறோம். அவரைப் பற்றிய ஏதேனும் ஒரு செய்தி நம்மிடம் வந்துவிட்டால், அதை நம்பி உடனே பரப்புகிறோம்.
மார்க்கம் என்பது ஒழுக்கம் சார்ந்தது. வெறும் சடங்குகளும், சுவர்களில் தொங்கவிடப்பட்ட வசனங்களும் அல்ல.
- நூஹ் மஹ்ழரி
தொடர்புடைய செய்திகள்
September 15, 2026, 12:01 am
நினைத்தது ஒன்று! நடந்தது வேறொன்று: பிரிக்ஸ் மாநாடு ஒரு கண்ணோட்டம்
September 11, 2026, 6:33 am
உடல் பருமன் என்பது வெறும் தோற்றப் பிரச்சனையா? - வெள்ளிச் சிந்தனை
September 4, 2026, 8:14 am
உலக வாழ்க்கையை அல்லாஹ் ஏன் தண்ணீருடன் ஒப்பிடுகிறான்? - வெள்ளிச் சிந்தனை
August 31, 2026, 12:36 pm
நேபாள் வெள்ளம் திட்டமிட்ட சதியா?
August 28, 2026, 7:29 am
பெண்களுக்கு கண்ணியம் வழங்கியவர் எவர்? - வெள்ளிச் சிந்தனை
August 21, 2026, 7:35 am
வாழ்க்கைக் கதைகள் நமக்குத் தரும் பாடங்கள் - வெள்ளிச் சிந்தனை
August 17, 2026, 9:49 am
தொப்பையால் ஆபத்து - ஆரோக்கிய சிந்தனை
August 14, 2026, 9:39 am
அப்பாஸிய சகாப்தம் மார்க்க அறிஞர்களை கௌரவித்த உன்னதமான காலகட்டம் - வெள்ளிச் சிந்தனை
August 7, 2026, 9:43 am
வாழும் காலம் எல்லாம் தமிழுக்காகவே வாழ்ந்த இறையருட்கவிஞர் சீனி நைனா முகம்மது நினைவுநாள்
August 7, 2026, 7:17 am
