செய்திகள் சிந்தனைகள்
இயற்கை வளங்களை இறைவனின் படைப்பாகக் கருதுங்கள் - வெள்ளிச் சிந்தனை
இஸ்லாம் மரங்கள், இயற்கை வளங்கள் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் அளிக்கிறது. மரம் நடுவது சிறந்த நற்செயல் ஆகும்.
நபி (ஸல்) கூறினார்கள்: "ஒரு முஸ்லிம் ஒரு மரத்தை நட்டு, அதிலிருந்து மனிதர்களோ, பறவைகளோ அல்லது விலங்குகளோ பலன் அடைந்தால், அது அவருக்கு நிரந்தர தர்மமாக (ஸதகா ஜாரியா) அமையும்” (புகாரி)
இன்று சர்வ சாதாரணமாக காடுகள் அழிக்கப்படுகின்றன, மரங்கள் வெட்டப்படுகின்றன.
நமக்கு அது வெறும் மரம். விலங்குகளுக்கு அது வீடு.
மரம் என்பது வெறும் மரம் மட்டுமல்ல;
அது பறவைகளுக்கு புகலிடம், பூச்சிகளுக்கு உணவு, விலங்குகளுக்கு நிழல், சூழல் மண்டலத்தின் உயிர்நாடி.
காடுகள் அழியும்போது வனவிலங்குகள் மரங்களை மட்டுமல்ல; பாதுகாப்பு, தங்குமிடம், உணவு, உயிர்வாழ்வதற்கான மிக அடிப்படையானவற்றையும் இழக்கின்றன.
நாம் அதை 'வளர்ச்சி’ என்று அழைக்கிறோம். அவை அதனை 'இடப்பெயர்வு’ என்று உணர்கின்றன.
வனப்பகுதியில் மயான நிசப்தம் மட்டுமே எஞ்சியிருக்கும் ஓசையாக மாறுவதற்கு முன் காடுகளைப் பாதுகாப்போம்.
சுவனத்தில் பிரம்மாண்டமான மரங்கள் உள்ளன. அவற்றின் நிழலில் பயணிப்பவர்கள் நூறு ஆண்டுகள் சென்றாலும் அதன் எல்லையை அடைய முடியாது. அந்த அளவிற்கு அவை விரிந்திருக்கும்.
இது இயற்கையின் சிறப்பையும் சுவனத்தின் வனப்பையும் மனக்கண்முன் சித்தரிக்கிறது.
இஸ்லாம் இயற்கை வளங்களை இறைவனின் படைப்பாகக் கருதுகிறது. மரங்களை அழிப்பது அல்லது தேவையின்றி வெட்டுவது கண்டிக்கத்தக்கது.
மரம் வளர்ப்பதை ஒரு சமூகப் பொறுப்பாகவும், இறைவனின் நெருக்கத்தைப் பெற்றுத் தரும் நற்செயலாகவும் இஸ்லாம் முன்வைக்கிறது.
- நூஹ் மஹ்ழரி
தொடர்புடைய செய்திகள்
September 15, 2026, 12:01 am
நினைத்தது ஒன்று! நடந்தது வேறொன்று: பிரிக்ஸ் மாநாடு ஒரு கண்ணோட்டம்
September 11, 2026, 6:33 am
உடல் பருமன் என்பது வெறும் தோற்றப் பிரச்சனையா? - வெள்ளிச் சிந்தனை
September 4, 2026, 8:14 am
உலக வாழ்க்கையை அல்லாஹ் ஏன் தண்ணீருடன் ஒப்பிடுகிறான்? - வெள்ளிச் சிந்தனை
August 31, 2026, 12:36 pm
நேபாள் வெள்ளம் திட்டமிட்ட சதியா?
August 28, 2026, 7:29 am
பெண்களுக்கு கண்ணியம் வழங்கியவர் எவர்? - வெள்ளிச் சிந்தனை
August 21, 2026, 7:35 am
வாழ்க்கைக் கதைகள் நமக்குத் தரும் பாடங்கள் - வெள்ளிச் சிந்தனை
August 17, 2026, 9:49 am
தொப்பையால் ஆபத்து - ஆரோக்கிய சிந்தனை
August 14, 2026, 9:39 am
அப்பாஸிய சகாப்தம் மார்க்க அறிஞர்களை கௌரவித்த உன்னதமான காலகட்டம் - வெள்ளிச் சிந்தனை
August 7, 2026, 9:43 am
வாழும் காலம் எல்லாம் தமிழுக்காகவே வாழ்ந்த இறையருட்கவிஞர் சீனி நைனா முகம்மது நினைவுநாள்
August 7, 2026, 7:17 am
