செய்திகள் சிந்தனைகள்
“கீழே இறக்கியே தீருவான்” - வெள்ளிச் சிந்தனை
இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் ஓர் ஒட்டகம் இருந்தது.
‘அள்பா’ என்று பெயர்.
மிக விரைவாக ஓடக்கூடியது.
பந்தயத்தில் அள்பா ஒட்டகத்தை யாராலும் வெல்ல முடியாது.
இந்த நிலையில் ஒரு கிராமவாசி ஓர் ஒட்டகத்தில் பயணித்து வந்தார்.
அது சாதாரண ஒட்டகம்.
வழக்கமாகப் பயணத்திற்கும் சுமை ஏற்றுவதற்கும் பயன்படுகின்ற ஒட்டகம்தான் அது.
ஆனால் அந்தக் கிராம வாசியின் ஒட்டகம், இறைத்தூதரின் அள்பா ஒட்டகத்தை முந்திவிட்டது.
நபித்தோழர்கள் பெரிதும் வருத்தமும் கவலையும் அடைந்தார்கள்.
போயும் போயும் ஒரு கிராமவாசியின் சாதாரண ஒட்டகத்திடம் நபிகளாரின் சிறப்பு ஒட்டகம் பிந்திவிட்டதே என்று மனவேதனை அடைந்தார்கள்.
தோழர்களின் வேதனையை அறிந்த நபிகளார்(ஸல்) என்ன சொன்னார்?
“பிடியுங்கள் அந்தக் கிராமவாசியை..
வெட்டுங்கள் அந்த ஒட்டகத்தை...” என்றா சொன்னார்?
இல்லை..
பிறகு?
மிகுந்த பணிவுடன் கூறினார்-
“உலகில் உயர்ந்துவிடுகின்ற எந்தப் பொருளையும் ஒரு நாள் கீழே இறக்குவதுதான் இறைவனின் நியதியாகும்.”(மிஷ்காத்- 3871)
எத்துணை அழகான வழிகாட்டுதல்.
அன்றாட வாழ்விலும் பார்த்துக் கொண்டுதானே இருக்கிறோம்..
நேற்றுவரை ஊரிலேயே பெரிய பணக்காரர்...
இன்று வறுமையில் வாட்டம்...
பகட்டு, படாடோபமாக வாழ்ந்த குடும்பம்..
இன்று வாழ்ந்து கெட்ட குடும்பமாக....
வணிகத்தில் நேற்றுவரை கொடி கட்டிப் பறந்தவர்..
இன்று தெருக்கோடியில்..
சில மாதங்களுக்கு முன்புவரை ஆட்சி அதிகார போதையில்...
இன்று படு பாதாளத்தில்...
மீண்டும் நபிகளாரின் அந்தப் பொன்மொழியை வாசியுங்கள்.
வெளிச்சக் கதவுகள் திறக்கும்.
- சிராஜுல் ஹஸன்
தொடர்புடைய செய்திகள்
July 3, 2026, 8:22 am
வாசிப்பும் வழிபாடுதான்... - வெள்ளிச் சிந்தனை
June 19, 2026, 7:24 am
மூளையைப் பாதுகாக்க இறைவன் செய்துள்ள ஏற்பாடுகள் பற்றி தெரியுமா? - வெள்ளிச் சிந்தனை
June 12, 2026, 9:23 am
இயற்கை வளங்களை இறைவனின் படைப்பாகக் கருதுங்கள் - வெள்ளிச் சிந்தனை
May 30, 2026, 9:03 pm
உலக புகையிலை எதிர்ப்பு தினம் 2026: புகையிலை ஒரு மெளன கொலையாளி
May 22, 2026, 9:01 am
படத்தில் உள்ள இரண்டு நெருப்புச் சுடர்களின் வேறுபாட்டை கவனித்தீர்களா?- வெள்ளிச் சிந்தனை
May 14, 2026, 7:30 pm
