நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் சிந்தனைகள்

By
|
பகிர்

கேரளத்தின் முதல்வராகிறார் வி.டி.சதீசன்: கேரள அரசியல் ஒரு பார்வை

இரண்டு முறை தொடர்ந்து ஆட்சியை தக்கவைத்திருந்த  இடதுசாரி அரசிடம் இருந்து காங்கிரஸ் கேரளத்தின் ஆட்சியை வென்றெடுத்தது , தேர்தல் முடிவுகள் அறிவிக் கப்பட்டு 12  நாட்கள் கழித்து மிகநீண்ட இழுபறிக்குப் பிறகு காங்கிரஸ் கட்சி தன்னுடைய முதல்வர் வி.டி. சதீசன் என்று அறிவித்துள்ளது .

முதல்வர் யாரென்று அறிவித்துவிட்டு தேர்தலை எதிர்கொள்ளும் தமிழ்நாடு போல் இல்லை கேரளம். அங்கு சி.பி. எம் தலைமையிலான இடது முன்னணி (LDF),காங்கிரஸ் தலைமையிலான மற்றொரு முன்னணி (UDF) என்றுதான் தேர்தல் எதிர்கொள்ளப்படும் .சமீப காலமாக பாஜக முன்னெடுக்கும் மூன்றாவது முன்னணி (NDA) .

காங்கிரஸ் கட்சி சார்பில் யார் முதல்வர் என்று முடிவு செய்யப்படுவதில் ஏற்பட்ட காலதாமதத்தைபரவலாக நாம் கிண்டல் செய்தாலும் கேரள அனுபவத்தில் அதுவொரு காங்கிரஸ் உட்கட்சி சார்ந்த ஜனநயகத்தின் ஆரோக்கியமான ஒன்றாகவே நமக்குப்படுகிறது . இந்த உட்கட்சி ஜனநாயகம் இடதுசாரி இயக்கங்களிலும் இருக்கவேண்டும். என்பதுதான் நம்முடைய விருப்பம் . 

கே,சி.வேணுகோபால் , ரமேஷ் சென்னிதலாலா , வி,டி, சதீசன் என் மூவர் கேரளகாங்கிரஸ் கட்சியில்  முதல்வர் பதவிக்குப் போட்டியிட்டனர்.அதிலும் வேணுகோபால் சதீசன் இருவருக்கும் இடையில்தான் போட்டி .  . 

 முன்னைய இருவருடன் ஒப்பிடுகையில்  சென்ற ஐந்து ஆண்டுகளில் தீவிரமாக செயல்பட்டதைத்தவிர சதீசனுக்கு கட்சி சார்ந்து வேறு பெரிய தலைமை அனுப வங்கள் இல்லை. ஆனால் சென்ற ஐந்து ஆண்டு களில் அவருடைய உழைப்பு கடுமையாக இருந்தது என்பதற்கு இந்தமுறை காங்கிரஸ் பெற்றிருக்கும் வெற்றியே சாட்சி .

 காங்கிரஸ் கட்சியின் உயர்மட்டக்குழு தொடங்கி அதன் மேலிடம் முழுவதும் செல்வாக்கை செலுத்திக் கொண்டி ருக்கும் அகில இந்திய அரசியலிலும் கேரள அரசியலி லும் வல்லமை பெற்றிருக்கும்   கே.சி.வேணுகோபால் போன்ற ஒருவரை மீறி காங்கிரஸ் தலைமை வி.டி.சதீசன் போன்ற கட்சியில் மேலிட செல்வாக்கு அதிகம் இல்லாத ஒருவரை முதல்வராக தேர்வு செய்கி றது எனும்போது  அது அந்தக் கட்சியின் உள்கட்சி அமைப்பும் , அதனுள் இருக்கும் இந்த நெகிழ்வுத் தன்மையும் உட்கட்சி  ஜனநாயகம் சார்ந்த  சார்ந்த ஓர் ஆரோக்கியமான கூறு .

இன்னொருவகையில் வி.டி.சதீசன் தேர்வு என்பது முக்கியத்துவப்படுகிறது . காங்கிரஸ் என்று பொதுவாக சொன்னாலும் அதற்குள் இரண்டு ஓட்டங்கள்எப்போதும் உண்டு .ஒன்று மென்மையான இந்துத்துவ குணம் கொண்ட காங்கிரஸ்காரர்கள்  இன்னொன்று மதச்சார்பற்ற தன்மையின் மீது அழுத்தம் கொடுக்கிற காங்கிரஸ் காரர்கள் .

இதில் கே.சி.வேணுகோபால் முதல் ரகம் , வி.சதீசன் இரண்டாவது ரகம் . முன்னெப்போதும் இல்லாத நிலையில் கேரளத்தில் அரசியல் உரையாடல் ஒன்று செட் செய்யப்பட்டு வருகிறது .

காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியில் நின்று வெற்றி பெற்று அமைச்சரவையில்  பங்கு பெற இருக்கும் முஸ்லிம் லீக் கட்சிக்கு வழங்கப்படும் மந்திரித் துறைகள் முக்கியமானதாக இருக்கக்கூடாது என்பது அந்த சொல்லாடலின் மையம் . 

குறிப்பாக கல்வி ,உள்துறை போன்ற வகுப்புகள் வழங்கப்படக்கூடாது என்று அந்த சொல்லாடல் நகர்கிறது .இந்த சொல்லாடலை முன்னெடுக்கிற சக்திகள்  கே.சி வேணுகோபாலை நோக்கி நகர்கின்றன .அந்த வகையில் கேரளாவின் நாயர்களை முன்னிறுத் தும் என்.எஸ். எஸ் அமைப்பு , ஈழவர்களை முன்னிறுத் தும்  வெள்ளாப்பள்ளி நடேசன் போன்றவர்கள் கேசி வேணுகோபால் முதல்வர் ஆவதை விரும்பினார்கள் 

அதே நேரத்தில்  முஸ்லிம் லீக் , ஜமாத்தே இஸ்லாமி . ஆர்,எஸ்.பி., கேரள காங்கிரஸ் உள்ளிட்ட காங்கிரஸ் கூட்டணியில் உள்ள கட்சிகள் வி.டி.சதீசன் முதல்வர் ஆவதற்கு அழுத்தம் கொடுத்தன 

இந்த பின்புலத்தில் வி.டி.சதீசன் முதல்வர் ஆகி இருப்பது  என்பது முக்கியமாகிறது .ஏற்கனேவே லவ் ஜிகாத் , மாட்டிறைச்சி , கேரள ஸ்டோரி என்னும் பல்வேறு வடிவங்களில் கேரள முஸ்லிம்களுக்கு எதிரான ஓர் உரையாடலை கேரள இந்துத்துவம் தொடர்ந்து முன்னெடுத்துக் கொண்டிருக்கும் சூழலில் முதல்வர் பதவியில் இருந்து கே.சி.வேணுகோபாலை விலக்கி நிறுத்தியதும்  வி.டி. சதீசனை முதல்வர் ஆகியதும் கேரளத்தின் அடுத்த ஐந்தாண்டுகால அரசியலில் முக்கிய நகர்வாக இருக்கும் .

- தக்கலை ஹாமிம் முஸ்தஃபா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset