செய்திகள் உலகம்
பிரிட்டிஷ் சொகுசுக் கப்பலில் புதிதாக இப்போது நொரோவைரஸ்
லண்டன்:
பிரிட்டிஷ் சொகுசுக் கப்பலில் நொரோவைரஸ் (norovirus) தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது.
அந்த நோயால் பாதிக்கப்பட்ட பல பயணிகளுக்கு வயிற்றுப் பிரச்சினை இருப்பதாகத் தெரியவந்துள்ளது.
சொகுசு கப்பல் நேற்று பிரான்ஸின் பொர்டோ (Bordeaux) நகரைச் சென்றுசேர்ந்தது.
முதலில் கப்பலிலுள்ள அனைவரையும் வெளியேறவிடாமல் பிரெஞ்சு அதிகாரிகள் தடுத்து வைத்தனர்.
இன்று நோய் அறிகுறிகள் இல்லாதோர் கப்பலிலிருந்து வெளியேற அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.
கப்பலில் இருந்த 92 வயதுப் பிரிட்டிஷ் பயணி மாண்டார்.
நொரோவைரஸ் அதிவேகமாகப் பரவக்கூடிய நோய். வாந்தி, வயிற்றுப்போக்கு ஆகியவற்றை உண்டாக்கலாம்.
ஆனால் நோயால் பாதிக்கப்படும் பெரும்பாலானோர் 3 நாளுக்குள் குணமடைந்துவிடுவர்.
நொரோவைரஸ் பொதுவாக மரணத்தை விளைவிக்காது. ஆனால் மூத்தோர், உடல்நலம் குன்றியவர்களுக்கு மரணம் ஏற்படலாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
July 10, 2026, 11:39 am
சீனாவின் காலணி தொழிற்சாலையில் தீ: 28 பேர் பலி
July 9, 2026, 11:56 am
மேற்கு ஐரோப்பாவில் கடுமையான வெப்ப அலை: ஜூன் மாதம் மிக வெப்பமான மாதமாக பதிவு
July 8, 2026, 9:43 pm
ஈரானுடனான தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தம் முறிந்தது: டிரம்ப் திடீர் அறிவிப்பு
July 8, 2026, 11:37 am
தாய்லாந்தில் அமைச்சரவை மாற்றமா? பிரதமர் அனுடின் சார்ன்விரகுல் மறுப்பு
July 6, 2026, 4:54 pm
உலகக் கிண்ணம்: உலக சுற்றுலாவாசிகளைக் கவரும் காபோ வெர்ட்டுக்கு ஒரு சிறந்த விளம்பரம்
July 4, 2026, 3:50 pm
