செய்திகள் இந்தியா
கேரள முதல்வராக வி.டி. சதீசன் தேர்வு
திருவனந்தபுரம்:
கேரள மாநிலத்தின் புதிய முதல்வராக வி.டி. சதீசனை காங்கிரஸ் மேலிடம் வியாழக்கிழமை தேர்வு செய்துள்ளது.
கேரள சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி வெற்றி பெற்ற நிலையில், முதல்வர் பதவிக்கு கட்சிக்குள் கடும் போட்டி நிலவியது.
அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால், எதிர்க்கட்சித் தலைவராக இருந்த வி.டி. சதீசன், காங்கிரஸ் மூத்த தலைவர் ரமேஷ் சென்னிதலா ஆகியோரின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டது.
மூவரிடமும் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி தனித்தனியாக ஆலோசனை நடத்தினர்.
சுமார் 10 நாள்களுக்கு மேல் கேரள முதல்வரைத் தேர்ந்தெடுக்க முடியாமல் காங்கிரஸ் தலைமை திணறியது.
இந்த நிலையில், வி.டி. சதீசனை கேரள முதல்வராகவும் காங்கிரஸ் சட்டப்பேரவைக் குழுத் தலைவராகவும் தேர்ந்தெடுத்துள்ளதாக காங்கிரஸ் தலைமை அறிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, விரைவில் முதல்வர், அமைச்சரவை பதவியேற்புக்கான தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
October 9, 2026, 6:43 am
வளைகுடா போர் பதற்றம்: இந்திய விமான நிறுவனங்கள் அதிரடியாக உயர்த்திய விமானக் கட்டணங்கள்
October 5, 2026, 4:54 pm
கள்ளக் காதலியுடன் ஊர் சுற்றியபோது காரை இடைமறித்த மனைவியை பானெட்டில் இழுத்து சென்ற கணவர்
October 3, 2026, 3:44 pm
இந்திய விமானி ஸ்மித் மச்சாருக்கு, இஸ்ரேலிய சுற்றுலா பயணிகள் பதாகை ஏந்தி நன்றி தெரிவித்தனர்
October 1, 2026, 8:31 pm
டில்லியில் பெண்களுக்குப் பாதுகாப்பு கோரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
October 1, 2026, 5:55 pm
174 பேர் இருந்த விமானத்தைக் காப்பாற்ற உதவிய இந்திய விமானி
September 30, 2026, 10:34 am
டெல்லியில் இன்று நடைபெறும் ‘இண்டியா’ கூட்டணி கூட்டத்தை திமுக புறக்கணிக்கிறது: டி.கே.எஸ். இளங்கோவன் அறிவிப்பு
September 28, 2026, 1:47 pm
பெங்களூரு விமான நிலைய ஓடுபாதை தரையில் மோதிய இண்டிகோ விமானத்தின் வால் பகுதி
September 26, 2026, 9:26 pm
