நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

வளைகுடா போர் பதற்றம்: இந்திய விமான நிறுவனங்கள் அதிரடியாக உயர்த்திய விமானக் கட்டணங்கள்

புதுடெல்லி: 

மத்திய கிழக்கில் போர்ப் பதற்றம் காரணமாக, விமான எரிபொருள் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. 

இதன் காரணமாக இன்று முதல் விமான டிக்கெட் கட்டணத்தை உயர்த்த ஆகாசா ஏர், ஏர் இந்தியா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.இந்திய நிகழ்வுகள்

ஆகாசா ஏர் நிறுவனம் உள்நாட்டு விமானங்களுக்கு ரூ.375 முதல் ரூ.1,150 வரையிலும், சர்வதேச விமானங்களுக்கு ரூ.2,500 வரையிலும் கட்டணம் உயர்த்தியுள்ளது. 

ஏர் இந்தியா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனங்கள் உள்நாட்டு சேவைகளுக்கு ரூ.400 முதல் ரூ.1,200 வரையிலும், சர்வதேச சேவைகளுக்கு 55 டாலர் முதல் 215 டாலர் வரையிலும் கட்டணத்தை உயர்த்தியுள்ளன.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset