நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

டில்லியில் பெண்களுக்குப் பாதுகாப்பு கோரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

புது டெல்லி:

இந்தியத் தலைநகர் புதுடில்லியில் பெண்களுக்குக் கூடுதல் பாதுகாப்புக் கோரி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அண்மையில் தொடர்ச்சியாக பல பாலியல் வன்முறைச் சம்பவங்கள் நடந்ததாகக் கூறப்படும் நிலையில், மாநிலத்தை ஆளும் பாஜக அரசாங்கம் இதற்கு பொறுப்பேற்க வேண்டும் என்று மாணவர்கள் வலியுறுத்துகின்றனர்.

சமீபகாலமாக உள்நாட்டு பெண்களை மட்டுமல்லாமல் வெளிநாட்டு பெண்களும்  பாலியல் வன்முறைக்கு ஆளாகிவருகின்றனர்.  

டில்லியில் நிர்பயா பலாத்காரச் சம்பவம் நடந்து சுமார் 14 ஆண்டுகளாகின்றன.

ஆனால் பெண்களின் நிலையும் பாதுகாப்பும் இன்னும் மாறவில்லை என்று மக்கள் கேள்வி கேட்க தொடங்கி உள்ளனர்.

பாலியல் வன்முறைக்கு அதிகாரிகள் அளித்துள்ள பதில் பலரை இன்னும் கோபமடையச் செய்துள்ளது.

டில்லியில் பெண்கள் இரவு நேரங்களில் பூங்காக்களுக்குச் செல்ல வேண்டாம் என்று அதிகாரிகள் கூறியதால் பொது மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தி எழுந்துள்ளது.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset