நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

இந்​திய விமானி ஸ்மித் மச்​சா​ருக்​கு,  இஸ்​ரேலிய சுற்​றுலா பயணி​கள் பதாகை ஏந்தி நன்றி தெரி​வித்​தனர்


மணாலி:

து​பா​யில் இருந்து இஸ்​ரேல் சென்ற விமானத்​தில் தாக்​குதலுக்​குள்​ளான போதி​லும், பயணி​களைக் காப்​பாற்​றிய இந்​திய விமானி ஸ்மித் மச்​சா​ருக்​கு, மணாலி​யில் இஸ்​ரேலிய சுற்​றுலா பயணி​கள் பதாகை ஏந்தி நன்றி தெரி​வித்​தனர்.  

இமாச்​சலப் பிரதேசத்​தின் மணாலி நகருக்​குச் சுற்​றுலா சென்ற இஸ்​ரேலிய பயணி​கள் சிலர், இந்​திய பைலட் கேப்​டன் ஸ்மித் மச்​சா​ரின் துணிச்​சலைப் பாராட்டி பதாகைகளை ஏந்​தித் தங்​கள் நன்​றியை​யும் அன்​பை​யும் வெளிப்​படுத்​தினர்.

“இது கேப்​டன் ஸ்மித். இவர் இஸ்​ரேலியர்​கள் நிறைந்த விமானத்​தைக் காப்​பாற்​றி​னார். இஸ்​ரேல் மக்​கள் இந்​தி​யாவை நேசிக்​கிறார்​கள், உங்​களு​டன் உறு​துணை​யாக நிற்​கிறார்​கள்” என்ற வாசகங்​கள் அடங்​கிய பதாகைகளு​டன் அவர்​கள் வலம் வந்​தனர். 

மேலும், மணாலி வீதி​களில் ஏ.ஆர். ரஹ்​மானின் “வந்தே மாதரம்” பாடல் ஒலிக்க, உள்​ளூர் மக்​களு​ட​னும் இந்​திய சுற்​றுலா பயணி​களு​ட​னும் அன்​பைப் பகிர்ந்து கொண்டு இனிப்பு வகைகளை வழங்​கிய அவர்​களின் இந்த நெகிழ்ச்​சி​யான காணொலிகள் தற்​போது சமூக வலை​தளங்​களில் பெரிதும் வைரலாகி வரு​கின்​றன.

காயமடைந்து சவுதி அரேபி​யா​வில் சிகிச்சை பெற்ற கேப்​டன் ஸ்மித் மச்​சார், மேல் சிகிச்​சைக்​காக அபு​தாபிக்கு மாற்​றப்​பட்​டுள்​ளார் என்​றும், அவர் தற்​போது நலமாக இருக்​கிறார் என்​றும் வெளி​யுறவு அமைச்​சகம் தெரி​வித்​துள்​ளது.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset