செய்திகள் இந்தியா
பெங்களூரு விமான நிலைய ஓடுபாதை தரையில் மோதிய இண்டிகோ விமானத்தின் வால் பகுதி
பெங்களூரு:
பெங்களூரு விமான நிலையத்தில் தரையிறங்கும் போது இண்டிகோ விமானத்தின் வால் பகுதி தரையில் மோதியதால் பரபரப்பு நிலவியது.
அசாம் மாநிலம், கவ்ஹாட்டியில் இருந்து பெங்களூரு வந்த இண்டிகோ விமானம், பெங்களூரு விமான நிலையத்தில் இரண்டாவது முறையாகத் தரையிறங்க முயன்றபோது அதன் வால் பகுதி ஓடுபாதையில் மோதியது.
பெங்களூரு கெம்பேகௌடா சர்வதேச விமான நிலையத்தில் வீசிய பலத்த காற்றுக்கிடையே தரையிறங்கும் போது இயல்புக்கு மாறான ஓடுபாதைத் தொடர்பை சந்தித்ததாக இண்டிகோ நிறுவனம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
பயணிகளும் பணியாளர்களும் பாதுகாப்பாக உள்ளனர் என்றும் அவர்கள் பாதுகாப்பாக இறக்கிவிடப்பட்டனர் என்றும் கூறப்பட்டுள்ளது.
இண்டிகோ நிறுவனத்தின் ஏ321 ரக விமானம், கடந்த காலங்களிலும் இதுபோன்று வால் பகுதி ஓடுபாதையில் மோதும் சம்பவங்களை எதிர்கொண்டுள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
September 26, 2026, 9:26 pm
இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி நாடு தழுவிய போராட்டம்
September 23, 2026, 3:13 pm
பிகாரில் கொட்டித்தீர்த்த கனமழை: 50 லட்சம் மக்கள் வெள்ளத்தால் பாதிப்பு
September 21, 2026, 10:20 pm
2030-க்குள் மணிக்கு 350 கி.மீ. வேகத்தில் செல்லும் ‘சுதேசி’ புல்லட் ரயில் தயாரிக்க இந்திய அரசு இலக்கு
September 16, 2026, 12:22 pm
இந்தியாவின் வட மாநிலங்களில் கடும் வெள்ளம்: 20 பேர் மாண்டனர்
September 14, 2026, 11:27 pm
மே.வங்கத்தில் 252 மதரஸாக்கள் மூட மாநில பாஜக அரசு உத்தரவு: மேலும் 100 கல்வி நிறுவனங்களுக்கு நோட்டீஸ்
September 12, 2026, 10:40 pm
பிரிக்ஸ் விருந்தினர்களுக்கு பிஹாரின் பிரபல உணவு வகை
September 10, 2026, 1:02 pm
