செய்திகள் இந்தியா
174 பேர் இருந்த விமானத்தைக் காப்பாற்ற உதவிய இந்திய விமானி
கத்தியால் குத்தப்பட்ட நிலையிலும், 174 பேர் இருந்த விமானத்தைக் காப்பாற்ற உதவிய இந்திய விமானி ஸ்மித் மச்சர் (Smit Machchhar).
ஸ்மித் பலரின் பாராட்டைப் பெற்று வருகிறார்.
இஸ்ரேல் நோக்கிச் சென்ற flydubai விமானத்தின் கேப்டன் மச்சர்.
அவரை நடுவானில் துணை விமானி கத்தியால் குத்தியதாக இஸ்ரேலிய அதிகாரிகள் கூறினர்.
ரத்த வெள்ளத்தில் விமானி அறையில் கிடந்த மச்சர், அந்த நிலையிலும் கதவைத் திறக்கும் அமைப்பை இயக்கினார். இதனால் பயணிகளும் விமானப் பணியாளர்களும் உள்ளே நுழைந்து தாக்குதல் நடத்திய துணை விமானியைக் கட்டுப்படுத்தினர்.
அதே விமானத்தில் பயணிகளாக இருந்த இரண்டு flydubai விமானிகள், விமானத்தை சவுதி அரேபியாவின் தபூக் நகரில் பத்திரமாக தரையிறக்க உதவினர். அங்குள்ள மருத்துவமனையில் மச்சர் சிகிச்சை பெற்று வருகிறார்.
விமானியாக வேண்டும் என்பது மச்சரின் சிறுவயதுக் கனவு அல்ல. மும்பையைச் சேர்ந்த அவர் குடும்பத்தின் துணி உற்பத்தித் தொழிலைத் தொடர நினைத்தார். அதற்கான படிப்பில் சேர்ந்தார்.
19 வயதில் நடந்த விமானத் துறை கருத்தரங்கு ஒன்றுக்குப் பிறகு விமானியாக முடிவு செய்தார்.
நியூசிலந்தில் பயிற்சி பெற்ற அவர், SpiceJet நிறுவனத்தில் 11 ஆண்டுகள் பணியாற்றினார். 2022இல் flydubai-யில் சேர்ந்தார்.
சுமார் 15 ஆண்டுகளில் 9,750 மணி நேரம் விமானங்களை இயக்கியுள்ளார் மச்சர். அவர் பெயர் இப்போது உலகளவில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
September 30, 2026, 10:34 am
டெல்லியில் இன்று நடைபெறும் ‘இண்டியா’ கூட்டணி கூட்டத்தை திமுக புறக்கணிக்கிறது: டி.கே.எஸ். இளங்கோவன் அறிவிப்பு
September 28, 2026, 1:47 pm
பெங்களூரு விமான நிலைய ஓடுபாதை தரையில் மோதிய இண்டிகோ விமானத்தின் வால் பகுதி
September 26, 2026, 9:26 pm
இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி நாடு தழுவிய போராட்டம்
September 23, 2026, 3:13 pm
பிகாரில் கொட்டித்தீர்த்த கனமழை: 50 லட்சம் மக்கள் வெள்ளத்தால் பாதிப்பு
September 21, 2026, 10:20 pm
2030-க்குள் மணிக்கு 350 கி.மீ. வேகத்தில் செல்லும் ‘சுதேசி’ புல்லட் ரயில் தயாரிக்க இந்திய அரசு இலக்கு
September 16, 2026, 12:22 pm
இந்தியாவின் வட மாநிலங்களில் கடும் வெள்ளம்: 20 பேர் மாண்டனர்
September 14, 2026, 11:27 pm
மே.வங்கத்தில் 252 மதரஸாக்கள் மூட மாநில பாஜக அரசு உத்தரவு: மேலும் 100 கல்வி நிறுவனங்களுக்கு நோட்டீஸ்
September 12, 2026, 10:40 pm
