செய்திகள் இந்தியா
டெல்லியில் இன்று நடைபெறும் ‘இண்டியா’ கூட்டணி கூட்டத்தை திமுக புறக்கணிக்கிறது: டி.கே.எஸ். இளங்கோவன் அறிவிப்பு
புது டெல்லி:
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் தலைமையில் ‘இண்டியா’ கூட்டணி கட்சிகளின் கூட்டம் டெல்லியில் இன்று நடைபெறுகிறது.
இதில், எஸ்ஐஆர் விவகாரத்தில் தேர்தல் ஆணையத்துக்கு எதிராக அடுத்தகட்டப் போராட்டங்களை நடத்துவது, நாடாளுமன்றத்தில் தலைமைத் தேர்தல் ஆணையருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவது குறித்து ஆலோசிக்கவுள்ளனர்.
இதில் சிபிஐ (எம்), சிபிஐ, ஆர்ஜேடி, ஜேஎம்எம், என்சிபி (சரத் பவார் பிரிவு), சிவசேனா (உத்தவ்தாக்கரே பிரிவு) உள்ளிட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர்.
அதேநேரம், இக்கூட்டத்தை திமுக புறக்கணித்துள்ளது. அதேபோல், சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் இக்கூட்டத்தில் நேரடியாகக் கலந்து கொள்ள மாட்டார் என்று கூறப்படுகிறது.
லக்னோவில் நடைபெறும் மாநில அளவிலான விவசாயிகள் மாநாடு, ராஜ்யசபா தேர்தல் பணிகள் காரணமாக அவர் வர இயலவில்லை எனக் கூறப்பட்டுள்ளது.
திரிணமூல் காங்கிரஸ், ஆம் ஆத்மி, பிஜெடி கட்சியின் முக்கிய தலைவர்களும் இக்கூட்டத்தில் நேரடியாகப் பங்கேற்க வாய்ப்பு குறைவாகவே உள்ளது.
மாறாக தங்களது கட்சியின் பிரதிநிதிகளை அவர்கள் அனுப்பத்திட்டமிட்டுள்ளனர்.
இதுகுறித்து திமுக செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன் கூறியதாவது:தமிழகத்தில் இரண்டு அமைச்சர் பதவிகளுக்காக காங்கிரஸ் கட்சி தவெகவைத் தேர்ந்தெடுத்துள்ளது.
அதனால் எங்களால் அவர்களுடன் கூட்டணியில் தொடர முடியவில்லை. இனி தவெகவுடன்தான் பயணிக்கப் போகிறோம் என அவர்களே கூறிவிட்டனர்.
நிலைமை இப்படி இருக்க எங்களால் எப்படி அவர்களை ஆதரிக்க முடியும்? அவர்கள் கூட்டியுள்ள கூட்டத்துக்கு நாங்கள் எப்படி செல்ல முடியும்? இண்டியா கூட்டணியில் உள்ள பல கட்சிகளுக்கும் காங்கிரஸுடன் இணைந்து செல்லவிருப்பமில்லை.
ஆனால் பாஜகவை எதிர்க்க வேண்டும் என்பதில் அனைவருக்கும் ஒரே கருத்து உள்ளது.
எஸ்ஐஆர் விவகாரத்தில், அனைத்துக் கட்சிகளுக்கும் பிரச்சினைகள் என்னவென்று தெரியும். எனவே கூட்டத்தில் கலந்துகொள்வது என்பது வெறும் சம்பிரதாயம் மட்டுமே. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
September 28, 2026, 1:47 pm
பெங்களூரு விமான நிலைய ஓடுபாதை தரையில் மோதிய இண்டிகோ விமானத்தின் வால் பகுதி
September 26, 2026, 9:26 pm
இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி நாடு தழுவிய போராட்டம்
September 23, 2026, 3:13 pm
பிகாரில் கொட்டித்தீர்த்த கனமழை: 50 லட்சம் மக்கள் வெள்ளத்தால் பாதிப்பு
September 21, 2026, 10:20 pm
2030-க்குள் மணிக்கு 350 கி.மீ. வேகத்தில் செல்லும் ‘சுதேசி’ புல்லட் ரயில் தயாரிக்க இந்திய அரசு இலக்கு
September 16, 2026, 12:22 pm
இந்தியாவின் வட மாநிலங்களில் கடும் வெள்ளம்: 20 பேர் மாண்டனர்
September 14, 2026, 11:27 pm
மே.வங்கத்தில் 252 மதரஸாக்கள் மூட மாநில பாஜக அரசு உத்தரவு: மேலும் 100 கல்வி நிறுவனங்களுக்கு நோட்டீஸ்
September 12, 2026, 10:40 pm
பிரிக்ஸ் விருந்தினர்களுக்கு பிஹாரின் பிரபல உணவு வகை
September 10, 2026, 1:02 pm
