செய்திகள் இந்தியா
கள்ளக் காதலியுடன் ஊர் சுற்றியபோது காரை இடைமறித்த மனைவியை பானெட்டில் இழுத்து சென்ற கணவர்
மீரட்:
உத்தர பிரதேச மாநிலத்தின் மீரட் நகரைச் சேர்ந்தவர் மயங்க் சிங். திருமணமான இவர் வேறொரு பெண்ணை காதலித்து வந்ததாகவும், அவருடன் அடிக்கடி வெளியில் சுற்றி வந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், மயங்க் சிங்கின் மனைவி சுனிதா நேற்று முன்தினம் மாலை ஹாப்பூர் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது, கணவர் மயங்க் அவரின் காதலி மஹி வர்மாவுடன் காரில் அமர்ந்து மோமோ சாப்பிட்டுக் கொண்டிருந்தார். இதைப்பார்த்து கடும் கோபமடைந்த சுனிதா, காரை நோக்கி ஆவேசமாக சென்றார்.
சுனிதா கோபத்துடன் காரின் ஜன்னல்களை தட்டியதால், மயங்க் காரை எடுத்துக் கொண்டு தப்ப முயன்றார்.
இதையடுத்து, சுனிதா காரின் முன்பக்கம் சென்று அதன் பானெட்டின் மீது படுத்துக்கொண்டார். ஆனாலும் மயங்க் காரை நிறுத்தாமல் ஓட்டிச் சென்றார். சுனிதா கார் பானெட்டில் தொங்கியபடி பயத்தில் அலறினார். இருப்பினும் மயங்க் சுமார் 100 மீட்டர் தூரத்துக்கு காரை ஓட்டிச் சென்றார். பின்னர் அங்கு உள்ளூர்வாசிகள் அதிகளவில் திரண்டதால் அவர் காரை நிறுத்தினார்.
இதனையடுத்து, அவர் தன் கணவர் மீது கொலை முயற்சி, வரதட்சணைக் கொடுமை மற்றும் துரோகம் ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் போலீஸில் புகார் அளித்தார். அதன் பேரில் மயங்க், அவரது காதலி மஹி ஆகிய இருவரையும் கைது செய்த போலீஸார், காரையும் பறிமுதல் செய்தனர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
November 8, 2026, 6:36 pm
ராகுல் காந்தி வீட்டில் தீபாவளி தேநீர் விருந்து: தலைவர்கள் பங்கேற்பு
November 7, 2026, 10:04 pm
ராமாயணம் படக் காட்சியை பகிர்ந்து இந்தியர்களுக்கு தீபாவளி வாழ்த்துக் கூறிய ஈரான்
November 3, 2026, 11:02 pm
பாஜக எதிர்ப்பால் நடிகையின் தீபாவளி விழிப்புணர்வு விடியோ நீக்கம்: மீண்டும் பதிவேற்ற உயர் நீதிமன்றம் உத்தரவு
November 2, 2026, 3:39 pm
சவூதிக்கான விமான சேவைகளை தொடா்ந்து ரத்து செய்யும் இந்திய விமான நிறுவனங்கள்
November 1, 2026, 7:00 pm
இந்தியத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி நீக்கம்: தில்லியில் இந்தியா கூட்டணி மாபெரும் பேரணி
October 31, 2026, 6:03 pm
இந்தியாவின் இமயமலைப் பகுதியில் மோதிய ஹெலிகாப்டர்: 6 பேர் பலி
October 31, 2026, 12:30 pm
வங்கக் கடலில் மீண்டும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்தது: வானிலை மையம்
October 30, 2026, 11:07 pm
Toyota Fortuner காரைப் பரிசாய் வென்ற 6 வயதுச் சிறுவன்
October 30, 2026, 9:06 pm
