நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி நாடு தழுவிய போராட்டம்

புதுடெல்லி:

தலை​மைத் தேர்​தல் ஆணை​யர் ஞானேஷ் குமார் பதவி வில​கக் கோரி காங்கிரஸ் சார்​பில் நேற்று நாடு தழு​விய போராட்​டம் நடத்​தப்​பட்​டது.

தலைநகர் டெல்​லி​யில் தலை​மைத் தேர்​தல் ஆணை​யர் அலுவலகம் நோக்கி காங்​கிரஸார் பேரணி​யாக சென்​றனர். அவர்களை போலீ​ஸார் தடுத்து நிறுத்​தினர். 

ஹிமாச்சல பிரதேச தலைநகர் சிம்லா​வில் தேர்​தல் ஆணைய அலு​வல​கத்தை காங்கிரஸ் தொண்டர்கள் முற்​றுகை​யிட்​டனர்.

பிஹார் தலைநகர் பாட்​னா​வில் காங்​கிரஸ் தொண்​டர்​கள் பேரணி நடத்​தினர். அவர்​கள் மீது போலீ​ஸார் தண்​ணீரை பீய்ச்சியடித்து விரட்​டினர். 

இதற்கிடையே, தலை​மைத் தேர்​தல் ஆணை​யர் ஞானேஷ் குமார் பதவி வில​கா​விட்​டால் அக்​டோபர் 2-ம் தேதி முதல் டெல்லி ஜந்​தர் மந்​தரில் போராட்​டம் தொடங்​கப்​படும் என்று கரப்​பான்​பூச்சி ஜனதா கட்சி நிறு​வனர் அபிஜித் திப்கே தெரி​வித்​துள்​ளார்.

தேர்​தல் ஆணை​யர் ஞானேஷ் குமார் பாஜகவிற்கு ஆதரவாக ஆயிரக்கணக்கான வாக்காளர்களை நீக்கியுள்ளார் என்று தெரிய வந்ததால் போராட்டம் வெடித்துள்ளது.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset