செய்திகள் இந்தியா
`என்னையும், அபிஜீத், அசுதோஷ் போன்றவர்களையும் கைது செய்ய திட்டம்': கரப்பான் பூச்சி அமைப்பின் சௌரவ் தாஸ் குற்றச்சாட்டு
மும்பை:
தேர்தல் ஆணையம், வாக்காளர் பட்டியல் திருத்த நடவடிக்கையான சிறப்பு தீவிர திருத்தம் (SIR) தொடர்பிலான சர்ச்சை இந்திய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள், வாக்காளர் பட்டியல் திருத்த நடவடிக்கையான சிறப்பு தீவிர திருத்தம் (SIR) தொடர்பாக பல்வேறு கேள்விகளை எழுப்பி வரும் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் (சிஜேபி), ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி மும்பையில் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
போராட்டம் நடத்திய சிஜேபி தொண்டர்கள், மாணவர் அமைப்பினர் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், சிஜேபி செய்தி தொடர்பாளர் சௌரவ் தாஸ் தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். அந்தப் பதிவில், "அரசாங்கம் என்னையும், அபிஜீத், அஷுதோஷ் , ரத்னா மற்றும் பிற 'காக்ரோச் ஜனதா கட்சி' தலைவர்களையும் கைது செய்யத் திட்டமிட்டிருக்கிறது.
இத்தகைய சர்வாதிகார நடவடிக்கைகள் பலனளிக்கும் என்று அரசாங்கம் நினைத்தால், அது அவர்களின் தவறு! இளம் தலைமுறை விழித்துக்கொண்டுள்ளது.
நாங்கள் இருந்தாலும் இல்லாவிட்டாலும், நமது உரிமைகளுக்காகவும் எதிர்காலத்திற்காகவும் தொடர்ந்து போராடுமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம்.
சிறைவாசத்தையோ அல்லது அதைவிட மோசமான சூழலையோ எதிர்கொள்ள நாங்கள் எப்போதும் தயாராகவே இருக்கிறோம்.
போராட்டங்கள் தொடர வேண்டும். அக்டோபர் 10-ஆம் தேதி முதல் மக்கள் மிகப்பெரிய அளவில் ஒன்றுகூடிப் போராடுவதை உறுதிசெய்ய வேண்டும்" என்று தெரிவித்திருக்கிறார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
October 5, 2026, 4:54 pm
கள்ளக் காதலியுடன் ஊர் சுற்றியபோது காரை இடைமறித்த மனைவியை பானெட்டில் இழுத்து சென்ற கணவர்
October 3, 2026, 3:44 pm
இந்திய விமானி ஸ்மித் மச்சாருக்கு, இஸ்ரேலிய சுற்றுலா பயணிகள் பதாகை ஏந்தி நன்றி தெரிவித்தனர்
October 1, 2026, 8:31 pm
டில்லியில் பெண்களுக்குப் பாதுகாப்பு கோரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
October 1, 2026, 5:55 pm
174 பேர் இருந்த விமானத்தைக் காப்பாற்ற உதவிய இந்திய விமானி
September 30, 2026, 10:34 am
டெல்லியில் இன்று நடைபெறும் ‘இண்டியா’ கூட்டணி கூட்டத்தை திமுக புறக்கணிக்கிறது: டி.கே.எஸ். இளங்கோவன் அறிவிப்பு
September 28, 2026, 1:47 pm
பெங்களூரு விமான நிலைய ஓடுபாதை தரையில் மோதிய இண்டிகோ விமானத்தின் வால் பகுதி
September 26, 2026, 9:26 pm
இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி நாடு தழுவிய போராட்டம்
September 23, 2026, 3:13 pm
பிகாரில் கொட்டித்தீர்த்த கனமழை: 50 லட்சம் மக்கள் வெள்ளத்தால் பாதிப்பு
September 21, 2026, 10:20 pm
