செய்திகள் உலகம்
“தைவானால் சீனா - அமெரிக்கா இடையே மோதல் ஏற்படக்கூடும்” - ட்ரம்ப்பிடம் ஜி ஜின்பிங் எச்சரிக்கை
பீஜிங்:
சீனா - அமெரிக்கா உறவுகளில் மிக முக்கிய விஷயமாக இருக்கும் தைவான் விவகாரத்தை சரியாக கையாளாவிட்டால் இரு நாடுகளுக்கும் இடையே மோதல்களும் சண்டைகளும் ஏற்பட்டு, ஒட்டுமொத்த உறவும் பெரும் ஆபத்தில் சிக்கும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பிடம் சீன அதிபர் ஜி ஜின்பிங் தெரிவித்துள்ளார்.
மூன்று நாள் அரசு முறைப் பயணமாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் நேற்று சீனா சென்றடைந்தார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பெய்ஜிங் சர்வதேச விமான நிலையத்தில் அவரை, சீன துணை அதிபர் ஹான் ஜெங் வரவேற்றார்.
வர்த்தக போர்களில் யாருக்கும் வெற்றி கிடைக்காது என்பதை கடந்த கால சம்பவங்கள் மீண்டும் மீண்டும் நிரூபித்துள்ளன என தெரிவித்த ஜின்பிங், கருத்து வேறுபாடுகளும் உராய்வுகளும் இருக்கும் இடங்களில் சமமான ஆலோசனை மட்டுமே சரியான தேர்வாக இருக்கும் என்றார்.
நாம் கடினமாக உழைத்து உருவாக்கியுள்ள இந்த நல்ல உறவை; உத்வேகத்தை இரு தரப்பினரும் கூட்டாக தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்றும் ஜி ஜின்பிங் கேட்டுக்கொண்டார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
July 10, 2026, 11:39 am
சீனாவின் காலணி தொழிற்சாலையில் தீ: 28 பேர் பலி
July 9, 2026, 11:56 am
மேற்கு ஐரோப்பாவில் கடுமையான வெப்ப அலை: ஜூன் மாதம் மிக வெப்பமான மாதமாக பதிவு
July 8, 2026, 9:43 pm
ஈரானுடனான தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தம் முறிந்தது: டிரம்ப் திடீர் அறிவிப்பு
July 8, 2026, 11:37 am
தாய்லாந்தில் அமைச்சரவை மாற்றமா? பிரதமர் அனுடின் சார்ன்விரகுல் மறுப்பு
July 6, 2026, 4:54 pm
உலகக் கிண்ணம்: உலக சுற்றுலாவாசிகளைக் கவரும் காபோ வெர்ட்டுக்கு ஒரு சிறந்த விளம்பரம்
July 4, 2026, 3:50 pm
