செய்திகள் மலேசியா
ஆதார ஆவணங்களைச் சமர்ப்பித்து எம்ஏசிசியில் ரபிசி வாக்குமூலம் அளித்தார்
புத்ராஜெயா:
முன்னாள் பொருளாதார அமைச்சர் டத்தோஶ்ரீ ரபிசி ரம்லி இன்று இங்குள்ள மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமையகத்தில் ஆஜரானார்.
இங்கிலாந்தைச் சேர்ந்த குறைக்கடத்தி நிறுவனமான ஆர்ம் பிஎல்சி ஹோல்டிங்ஸ் உடன் அரசாங்கம் செய்துகொண்ட 1.1 பில்லியன் ரிங்கிட் முதலீட்டு வழக்கு தொடர்பான விசாரணை குறித்து தனது வாக்குமூலத்தைத் தொடர்வதற்காக அவர் அங்கு சென்றுள்ளார்.
அவர் இன்று காலை சுமார் 9.50 மணியளவில் தனது வழக்கறிஞர்களுடன் வந்தடைந்தார்.
பாண்டன் நாடாளுமன்ற உறுப்பினராகவும் உள்ள ரபிசி இன்று கூடுதலாக 28 பக்க ஆதார ஆவணங்களை எம்ஏசிசி விசாரணை அதிகாரிகளிடம் சமர்ப்பிக்க உள்ளதாகவும் கூறினார்.
இந்த ஆதாரங்களில் ஊடகங்களிடமிருந்தும் பெறப்பட்டவை அடங்கும்.
ஏனெனில் அந்நிறுவனத்தின் உடனான இந்த ஒத்துழைப்பு, 1 எம்சிபியைபோல மூடிய கதவுகளுக்குப் பின்னால் அமைதியாகச் செய்யப்படவில்லை.
இது பொதுவானது என்று ரபிசி ரம்லி கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 20, 2026, 6:10 pm
டிக்டாக் பதிவுகளால் நேர்ந்த விபரீதம்: இருவருக்கு அபராதம்
May 20, 2026, 5:18 pm
மெர்சிங்கைச் சுற்றியுள்ள கடல் பகுதிகளை ஆய்வு செய்த மாமன்னர்
May 20, 2026, 4:24 pm
BN, GRS, GPS உறுதிமொழி; அன்வருக்கு பலம் சேரும் அரசியல் நகர்வு
May 20, 2026, 12:14 pm
14 வயது மாணவருடன் பாலியல் அத்துமீறல்?: குற்றச்சாட்டுகளை மறுத்த ஆசிரியை
May 20, 2026, 12:00 pm
சரவாக் காடு காப்பகங்களில் இரண்டு புதிய உயிரினங்கள் கண்டுபிடிக்கப்பட்டன
May 20, 2026, 11:06 am
