செய்திகள் மலேசியா
என்.எஸ்.எம் ஏவுகணை ஏற்றுமதி உரிமத்தை நார்வே தடுத்த முடிவுக்கு மலேசியா எதிர்ப்பு: பிரதமர்
கோலாலம்பூர்:
கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகளை (என்.எஸ்.எம்) மலேசியாவிற்கு ஏற்றுமதி செய்வதற்கான உரிமத்தைத் தடுக்கும் அந்த நாட்டின் அதிர்ச்சியூட்டும் முடிவு குறித்து, டத்தோஸ்ரீ அன்வர் இப்ராஹிம், நார்வே பிரதமர் ஜோனாஸ் கார் ஸ்டோருக்கு கடும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளார்.
தனது சக பிரதமருடனான தொலைபேசி உரையாடலில், 2018 முதல் கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், மலேசியா அதன் ஒவ்வொரு கடமைகளையும், எந்தவொரு சந்தேகமும் இல்லாமல், உன்னிப்பாக நிறைவேற்றி வருவதாக பிரதமர் வலியுறுத்தினார்.
"என்.எஸ்.எம் அமைப்புகள், அதன் தொடர்புடைய ஏவுதள அமைப்புகளுக்கான ஏற்றுமதி உரிமத்தை, நோர்வேயின் பாதுகாப்புக்குப் பங்கம் விளைவிக்கக்கூடாது என்று கூறப்படும் காரணத்தின் பேரில், ஒருதலைப்பட்சமாக, ஏற்றுக்கொள்ள முடியாத முறையில் ரத்து செய்வது தொடர்பாக, நோர்வே பிரதமர் ஜோனாஸ் கார் ஸ்டோருடனான தொலைபேசி உரையாடலில், மலேசியாவின் கடும் எதிர்ப்பை நான் ஏற்கனவே தெரிவித்துவிட்டேன்.
"2018 முதல், இந்த ஒப்பந்தத்தின் கீழ் உள்ள ஒவ்வொரு கடமையையும் மலேசியா உன்னிப்பாக, உண்மையுடனும், எந்தவிதமான சந்தேகமும் இல்லாமலும் நிறைவேற்றியுள்ளது. இருப்பினும், அதே மரியாதையையும், நல்லெண்ணத்தையும் பதிலுக்குக் காட்ட நோர்வே உணரவில்லை.
"இந்த முடிவு, மலேசியாவின் பாதுகாப்பு செயல்பாட்டுத் தயார்நிலை, கடற்கரைப் போர்க் கப்பல் (எல்.சி.எஸ்) நவீனமயமாக்கல் திட்டத்தை கடுமையாகப் பாதிக்கும் என்று நான் வலியுறுத்துகிறேன். இது, பிராந்திய மூலோபாய சமநிலைக்கும் நிச்சயமாக பரந்த தாக்கங்களை ஏற்படுத்தும்.
"கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தம் கட்டுப்பாடான ஆவணமாகும். இது விருப்பம்போல் நடத்தப்படக்கூடிய ஒரு துண்டு காகிதம் மட்டுமல்ல. ஐரோப்பிய பாதுகாப்பு விநியோகர்கள், எந்தவிதமான விளைவுகளும் இல்லாமல், ஒப்பந்தங்களிலிருந்து பின்வாங்குவதற்குத் தங்களுக்கு உரிமை உண்டு என்று உணர்ந்தால், மூலோபாய பங்காளிகளாக அவர்களின் மதிப்பு முற்றிலும் மறைந்துவிடும்" என்று அவர் இன்று தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
இதற்கு முன்னர், பாதுகாப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ முஹம்மத் காலிட் நோர்டின், மலேசியாவிற்கான என்.எஸ்.எம் ஏற்றுமதி உரிமத்தைத் தடுக்கும் நோர்வே அரசாங்கத்தின் அதிர்ச்சியூட்டும் முடிவு குறித்து விளக்கம் பெறுவதற்காக, இந்த மாத இறுதியில் சிங்கப்பூரில் தனது நோர்வே சக அமைச்சரைச் சந்திப்பதாகத் தெரிவித்திருந்தார்.
கடந்த மார்ச் மாதத்தில் திட்டமிடப்பட்ட தேதிக்கு சில நாட்களுக்கு முன்பு, சம்பந்தப்பட்ட சொத்துக்களை வழங்குவதை நோர்வே ரத்து செய்ததில் மலேசியாவின் வருத்தத்தையும், அதிர்ச்சியையும் தெரிவிப்பதற்கும் அந்தச் சந்திப்பு பயன்படுத்தப்படும் என்று முஹம்மத் காலிட் தெரிவித்ததாகத் தெரிகிறது.
குறிப்பிட்ட தொழில்நுட்பங்கள் தொடர்பான பல ஏற்றுமதி உரிமங்களை, அந்த நாட்டின் ஏற்றுமதிக் கட்டுப்பாடுகளை இறுக்குவதற்கான முயற்சிகளின் ஒரு பகுதியாக, நோர்வே வெளியுறவு அமைச்சு திரும்பப் பெற்றுள்ளதாகத் தெரிகிறது.
காங்ஸ்பெர்க் பாதுகாப்பு & விண்வெளி AS (KDA) நிறுவனத்தின் இணையதளத்தின் படி, என்.எஸ்.எம-இன் கொள்முதல், மலேசிய அரச கடற்படைக்கும் (டி.எல்.டி.எம்), கே.டி.ஏ-வுக்கும் இடையில் ஏப்ரல் 2018 இல் கையெழுத்திடப்பட்டது. புதிய எல்.சி.எஸ் கப்பல்களை ஆயுதமாக்குவதற்காக, 124 மில்லியன் யூரோ (571.9 மில்லியன் ரிங்கிட்) மதிப்பிலான ஒப்பந்தம் இதுவாகும்.
அந்த ஏவுகணை, 300 கிலோமீட்டருக்கும் அதிகமான தூரத்தில், உயர் துணை ஒலி வேகத்தில், நீண்ட தூர கடல் தாக்குதலை நடத்தும் திறன் கொண்டது.
- சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
May 20, 2026, 6:10 pm
டிக்டாக் பதிவுகளால் நேர்ந்த விபரீதம்: இருவருக்கு அபராதம்
May 20, 2026, 5:18 pm
மெர்சிங்கைச் சுற்றியுள்ள கடல் பகுதிகளை ஆய்வு செய்த மாமன்னர்
May 20, 2026, 4:24 pm
BN, GRS, GPS உறுதிமொழி; அன்வருக்கு பலம் சேரும் அரசியல் நகர்வு
May 20, 2026, 12:14 pm
14 வயது மாணவருடன் பாலியல் அத்துமீறல்?: குற்றச்சாட்டுகளை மறுத்த ஆசிரியை
May 20, 2026, 12:00 pm
சரவாக் காடு காப்பகங்களில் இரண்டு புதிய உயிரினங்கள் கண்டுபிடிக்கப்பட்டன
May 20, 2026, 11:06 am
