செய்திகள் மலேசியா
2026 உலகக் கோப்பையின் 104 போட்டிகளையும் RTM, Unifi TV ஒளிபரப்பவுள்ளன: ஃபஹ்மி ஃபாட்சில்
கோலாலம்பூர்: நாட்டின் மூன்று முக்கிய தொலைத்தொடர்பு நிறுவனங்களுடனான ஒரு மூலோபாய ஒத்துழைப்பின் விளைவாக, மலேசிய கால்பந்து ரசிகர்கள் 2026 ஃபிஃபா உலகக் கோப்பையின் 104 போட்டிகளின் ஒளிபரப்பையும் ரேடியோ டெலிவிஷன் மலேசியா (RTM), யூனிஃபை டிவி மூலம் கண்டு மகிழலாம் என்று தொலைத்தொடர்பு அமைச்சர் டத்தோ ஃபஹ்மி ஃபாட்சில் கூறினார்.
யூனிஃபை, செல்காம் டிஜி, யூ மொபைல் ஆகியவற்றை உள்ளடக்கிய இந்த ஒத்துழைப்பு, உலகத் தரம் வாய்ந்த விளையாட்டுகளை மக்களுக்குக் கொண்டு சேர்ப்பதை விரிவுபடுத்துவதோடு மட்டுமல்லாமல், கூடுதல் செலவின்றி தரமான உள்ளடக்கத்தை வழங்குவதில் பொது ஒளிபரப்பின் பங்கையும் வலுப்படுத்துகிறது என்று தொலைத்தொடர்பு அமைச்சர் கூறினார்.
"தகவல்தொடர்பு அமைச்சகத்தின் கீழ் உள்ள பொது ஒளிபரப்பு நிலையமான RTM, நாட்டின் மூன்று முக்கிய தொலைத்தொடர்பு நிறுவனங்களான யூனிஃபை, செல்காம் டிஜி, யூ மொபைல் ஆகியவற்றுடன் ஓர் புரிந்துணர்வு ஒத்துழைப்பை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது."
"இன்று, அனைத்து 104 போட்டிகளும் RTM, யூனிஃபை டிவியில் ஒளிபரப்பப்படும் என்பதை அறிவிப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்," என்று அவர் இன்று அங்கசாபுரியில் நடைபெற்ற வாராந்திர செய்தியாளர் சந்திப்பில் ஃபஹ்மி கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 6, 2026, 9:38 pm
ஜொகூர், நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தல்களில் பெர்சமா கட்சி போட்டியிடும்: ரபிசி
June 6, 2026, 9:36 pm
கெடிலான் உதவித் தலைவர்களாக சைபுடின், ஜலேஹா நியமனம்
June 6, 2026, 6:10 pm
15 நாட்கள் மர்மமாக மாயம்: இறுதியில் உயிருடன் கண்டுபிடிக்கப்பட்ட ஜாஸ்லிண்டா
June 6, 2026, 5:12 pm
மீன்பிடிக்கச் சென்ற சிறுவர்களுக்கு அதிர்ச்சி: வடிகாலில் ஆடவரின் சடலம் கண்டெடுப்பு
June 6, 2026, 2:38 pm
மாராவின் திவேட் கல்வி திட்டம் கிட்டத்தட்ட 100 சதவீத வேலை வாய்ப்பை எட்டியுள்ளது: ஜாஹித்
June 6, 2026, 1:30 pm
