செய்திகள் மலேசியா
டீசலின் சில்லறை விலை 30 சென் குறைந்துள்ளது: ரோன் 95 பெட்ரோலின் விலை 15 சென் குறைந்துள்ளது
கோலாலம்பூர்:
மானியம் இல்லாத டீசலின் விலை 30 சென் குறைந்து, ஒரு லிட்டர் 4.87 ரிங்கிட் என்ற விலையில் விற்கப்படும்.
மானியம் இல்லாத ரோன் 97 பெட்ரோலின் விலை 20 சென் குறைந்து, ஒரு லிட்டர் 4.90 ரிங்கிட்டுக்கு பதிலாக 4.70 ரிங்கிட் என்ற விலையில் விற்கப்படும்.
ரோம் 95 பெட்ரோலின் சில்லறை விலையும் 15 சென் குறைந்து, ஒரு லிட்டர் 4.02 ரிங்கிட்டுக்கு பதிலாக 3.87 ரிங்கிட் என்ற விலையில் வழங்கப்படுகிறது.
இது மே 14 முதல் மே 20 வரையில் அமலில் இருக்கும் என்று நிதியமைச்சு தெரிவித்துள்ளது.
தானியங்கி விலை நிர்ணய முறை சூத்திரத்திற்கு இணங்க, அனைத்துலக சந்தை விலைகளில் ஏற்பட்ட சரிவைத் தொடர்ந்து,
தீபகற்பத்தில் டீசலின் சில்லறை விலையும், மானியம் இல்லாத ரோன் 95, ரோன் 97 பெட்ரோலின் சில்லறை விலையும் குறைக்கப்பட்டுள்ளன.
இருப்பினும், மேற்கு ஆசியாவில் எரிபொருள் விலைகள் மோதலுக்கு முந்தைய நிலைகளை விட கணிசமாக அதிகமாகவே உள்ளன என நிதியமைச்சு கூறியது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 6, 2026, 9:38 pm
ஜொகூர், நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தல்களில் பெர்சமா கட்சி போட்டியிடும்: ரபிசி
June 6, 2026, 9:36 pm
கெடிலான் உதவித் தலைவர்களாக சைபுடின், ஜலேஹா நியமனம்
June 6, 2026, 6:10 pm
15 நாட்கள் மர்மமாக மாயம்: இறுதியில் உயிருடன் கண்டுபிடிக்கப்பட்ட ஜாஸ்லிண்டா
June 6, 2026, 5:12 pm
மீன்பிடிக்கச் சென்ற சிறுவர்களுக்கு அதிர்ச்சி: வடிகாலில் ஆடவரின் சடலம் கண்டெடுப்பு
June 6, 2026, 2:38 pm
மாராவின் திவேட் கல்வி திட்டம் கிட்டத்தட்ட 100 சதவீத வேலை வாய்ப்பை எட்டியுள்ளது: ஜாஹித்
June 6, 2026, 1:30 pm
