செய்திகள் இந்தியா
அகிலேஷ் யாதவின் சகோதரர் பிரதீக் யாதவ் காலமானார்
பாட்னா:
சமாஜவாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவின் சகோதரர் பிரதீக் யாதவ் உடல்நலக் குறைவால் புதன்கிழமை காலை காலமானார்.
மறைந்த சமாஜவாதி கட்சியின் நிறுவனர் முலாயம் சிங் யாதவுக்கும், அவரது இரண்டாவது மனைவி சாதனா குப்தாவுக்கு பிறந்தவர் பிரதிக் யாதவ் (வயது 38).
இவர் கடந்த சில நாள்களுக்கு முன்னதாக, உடல்நலக் குறைவு காரணமாக லக்னெளவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தார். உடல்நலன் முன்னேற்றம் அடைந்ததை தொடர்ந்து வீடு திரும்பியிருந்தார்.
இந்த நிலையில், இன்று காலை திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதை தொடர்ந்து மருத்துவனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட பிரதீக் யாதவ், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இவரது மறைவுக்கு சமாஜவாதி கட்சித் தலைவரும் சகோதரருமான அகிலேஷ் யாதவ் இரங்கல் தெரிவித்துள்ளார்.
அரசியலில் இருந்து விலகியிருந்த பிரதிக் யாதவ், சொந்தமாக உடற்பயிற்சி நிலையத்தை நடத்தி வந்தார். உடற்பயிற்சித் துறையிலும் தீவிர ஈடுபாட்டுடன் செயல்பட்டு வந்தார்.
இவரது மனைவியும் பாஜக நிர்வாகியுமான அபர்ணா யாதவ், உ.பி. மகளிர் ஆணையத்தின் துணைத் தலைவராக உள்ளார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
October 9, 2026, 6:43 am
வளைகுடா போர் பதற்றம்: இந்திய விமான நிறுவனங்கள் அதிரடியாக உயர்த்திய விமானக் கட்டணங்கள்
October 5, 2026, 4:54 pm
கள்ளக் காதலியுடன் ஊர் சுற்றியபோது காரை இடைமறித்த மனைவியை பானெட்டில் இழுத்து சென்ற கணவர்
October 3, 2026, 3:44 pm
இந்திய விமானி ஸ்மித் மச்சாருக்கு, இஸ்ரேலிய சுற்றுலா பயணிகள் பதாகை ஏந்தி நன்றி தெரிவித்தனர்
October 1, 2026, 8:31 pm
டில்லியில் பெண்களுக்குப் பாதுகாப்பு கோரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
October 1, 2026, 5:55 pm
174 பேர் இருந்த விமானத்தைக் காப்பாற்ற உதவிய இந்திய விமானி
September 30, 2026, 10:34 am
டெல்லியில் இன்று நடைபெறும் ‘இண்டியா’ கூட்டணி கூட்டத்தை திமுக புறக்கணிக்கிறது: டி.கே.எஸ். இளங்கோவன் அறிவிப்பு
September 28, 2026, 1:47 pm
பெங்களூரு விமான நிலைய ஓடுபாதை தரையில் மோதிய இண்டிகோ விமானத்தின் வால் பகுதி
September 26, 2026, 9:26 pm
