செய்திகள் கலைகள்
சாம்சங் நிறுவனம் $15 மில்லியன் இழப்பீடு தரவேண்டும்: பாப் இசை நட்சத்திரம் டுவா லிப்பா வழக்கு
சியோல்:
பிரிட்டிஷ் பாப் இசை நட்சத்திரம் டுவா லிப்பா (Dua Lipa) சாம்சங் (Samsung) நிறுவனம் 15 மில்லியன் டாலர் இழப்பீடு தரவேண்டும் என்று கோரி வழக்குத் தொடுத்துள்ளார்.
சாம்சங் நிறுவனம் அதன் தொலைக்காட்சிகள் சிலவற்றின் அட்டைப் பெட்டிகளில டுவா லிப்பாவின் அனுமதி இல்லாமல் அவரது நிழற்படத்தைப் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் அது பற்றி அறிந்தபின் தமது படத்தைப் பயன்படுத்தக்கூடாது என்று டுவா லிப்பா சாம்சங் நிறுவனத்தைக் கேட்டுக்கொண்டார்.
ஆனால் நிறுவனம் அதற்குச் செவி சாய்க்கவில்லை என்று அவரது வழக்கறிஞர்கள் கூறினர்.
டுவா லிப்பாவின் படம் அட்டைப் பெட்டியில் உள்ளது என்பதற்காகவே சிலர் அந்தத் தொலைக்காட்சிகளை வாங்கியதாய்க் குறிப்பிட்டதையும் அவர்கள் சுட்டிக் காட்டினர்.
சாம்சங் நிறுவனம் காப்புரிமைச் சட்டத்தை மட்டுமின்றி விளம்பர உரிமைகளையும் மீறியுள்ளதாகவும் டுவா லிப்பா குற்றஞ்சாட்டியுள்ளார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
October 8, 2026, 11:02 am
பிரபல பாலிவுட் நடிகர் நானா படேகர் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்
October 6, 2026, 5:06 pm
நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் 2 படத்தின் டிரெய்லர் வெளியானது
October 5, 2026, 3:48 pm
அதிக வசூல் சாதனை படைத்த அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்
October 4, 2026, 10:19 am
திரைப்பட இயக்குநா் சிங்கீதம் சீனிவாச ராவ் காலமானாா்
September 30, 2026, 3:27 pm
நடிகர் சூரியின் மண்டாடி திரைப்படம் 140 கோடி ரூபாய் வசூல் சாதனை
September 30, 2026, 3:17 pm
வெங்கட் பிரபு - சிவகார்த்திகேயன் இடையிலான படம் கைவிடப்பட்டது: வெங்கட் பிரபு எக்ஸ் தளத்தில் பதிவு
September 25, 2026, 2:54 pm
