நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

MyB2S திட்டத்தின் மூலம் 60,000 பி40 மாணவர்களுக்கு இலவச மோட்டார் சைக்கிள் உரிமம்: அந்தோனி லோக்

ஜொகூர்பாரு:

பள்ளிகளுக்கான மை லைசென்ஸ் பி2 (MyB2S) திட்டத்தின் மூலம் பி40 பிரிவைச் சேர்ந்த மொத்தம் 60,000 படிவம் 4, 5 மாணவர்கள் இலவச மோட்டார் சைக்கிள் உரிமங்களைப் பெறுவார்கள்.

இந்த ஆண்டு 18.5 மில்லியன் ரிங்கிட்டுக்கும் அதிகமான நிதி ஒதுக்கீட்டில் இத்திட்டம் மேற்கொள்ளப்படுகிறது என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் கூறினார்.

செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் இல்லாமல் மாணவர்கள் மோட்டார் சைக்கிள்களில் பள்ளிக்கு வருவது குறித்த கவலைகளைத் தொடர்ந்து இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது,

முறையான அறிவும் திறன்களும் இல்லாமல் மாணவர்கள் வாகனம் ஓட்டுவதால், இந்த நிலைமை சட்டவிரோதமானது மட்டுமல்லாமல், அவர்களின் பாதுகாப்பிற்கும் ஆபத்தை விளைவிக்கிறது.

குறிப்பாக கிராமப் புறங்களில், செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் இல்லாத இருசக்கர வாகன ஓட்டிகள் குறித்த அரசாங்கத்தின் கவலையைத் தொடர்ந்து இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இந்த முயற்சி, உரிமம் பெறுவதற்கான சட்டப்பூர்வ அணுகலை வழங்குவதோடு, இளைய தலைமுறையினரிடையே திறன், விழிப்புணர்வு மற்றும் சாலை விதிகளைப் பின்பற்றுதல் ஆகியவற்றை அதிகரிப்பதிலும் கவனம் செலுத்துகிறது.

கல்வியமைச்சர் ஃபட்லினா சிடேக் கலந்துகொண்ட MyB2S திட்டத்தைத் தொடங்கி வைத்த பிறகு அவர் இவ்வாறு கூறினார்.

புள்ளிவிவரங்களின்படி, ஒவ்வொரு ஆண்டும் 6,000க்கும் மேற்பட்ட உயிரிழப்பு விபத்துக்கள் பதிவாகின்றன.

அவற்றில் 65 சதவீதம் இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பின்னால் அமர்ந்து பயணிப்பவர்களை உள்ளடக்கியவை.

இந்த உயிரிழப்பு விபத்துக்களில் பெரும்பாலானவை, பள்ளி மாணவர்கள் உட்பட, 16 முதல் 25 வயதுக்குட்பட்ட சராசரி வயதினரை உள்ளடக்கியவை.

இதன் அடிப்படையின் தான் அரசாங்கம் இத்திட்டத்தை அரசாங்கம் அமலுக்கு கொண்டு வந்துள்ளது என்று அந்தோனி லோக் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset