நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அன்வார் தோல்வியுற்றார்; மாணவர் பிரிவின் எட்டுத் தலைவர்கள் கட்சியிலிருந்து விலகினர்

கோலாலம்பூர்:

பிரதமராக கட்சித் தலைவர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிமின் தலைமை மீது நம்பிக்கை இழந்துவிட்டதாகக் கூறியதைத் தொடர்ந்து, மாணவர்கள் கெடிலான் மலேசியா மத்திய தலைமை மன்றத்தின் எட்டுத் தலைவர்கள் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர்.

அதன் தலைவர் ராம் எர்பான் நேற்று இரவு பெட்டாலிங் ஜெயாவில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் இந்த விஷயத்தை உறுதிப்படுத்தினார்.

போராட்டத்தின் கொள்கைகள் பெருகிய முறையில் கைவிடப்படும்போது, ​​கட்சியை கண்மூடித்தனமாகப் பாதுகாக்கும் கலாச்சாரத்தை நாங்கள் நிராகரிக்கிறோம்.

இது தொடர்பாக மாணவர்கள் கெடிலான் மலேசியா  மத்திய தலைமை மன்றத்தின் எட்டு உறுப்பினர்கள் இன்று கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர.

மலேசிய நீதி மாணவர் அரசியலமைப்பின் 13.3 ஆம் பிரிவின்படி மத்திய தலைமை மன்ற உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பங்கிற்கும் அதிகமானோர் ராஜினாமா செய்யும்போது, கெஅசிலான் மாணவர் பிரிவின் தலைமை தானாகவே கலைக்கப்படும் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset