செய்திகள் மலேசியா
2024 குறைந்தபட்ச ஊதிய ஆணை மறுஆய்வில் முதலாளிகள், தொழிலாளர்கள் பங்கேற்க வேண்டும்: மனிதவள அமைச்சு
புத்ராஜெயா:
மனிதவள அமைச்சு தேசிய ஊதிய ஆலோசனைக் குழுவின் மூலம், 2024 ஆம் ஆண்டின் குறைந்தபட்ச ஊதிய ஆணை குறித்த மறுஆய்வை ஜனவரி முதல் செப்டம்பர் 2026 வரை செயல்படுத்தி வருகிறது.
தேசிய குறைந்தபட்ச ஊதிய விகிதமானது தற்போதைய பொருளாதார நிலை, வாழ்க்கைச் செலவு, தொழிலாளர் உற்பத்தித்திறன், தேசிய தொழிலாளர் சந்தையின் வளர்ச்சி ஆகியவற்றுக்குப் பொருத்தமானதாக இருப்பதை உறுதி செய்வதற்காக இந்த ஆய்வு மேற்கொள்ளப்படுவதாக அமைச்சு அறிக்கையில் அறிவித்துள்ளது.
இந்த ஆய்வின் ஒரு வழிமுறையாக, மே 6 முதல் ஜூன் 19 வரை இணையவழி கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. இது நாடு தழுவிய அனைத்து முதலாளிகள் மற்றும் தனியார் துறை தொழிலாளர்களுக்கும் திறந்திருக்கும்.
இந்த ஆய்வின் முடிவுகள், எதிர்காலத்தில் தேசிய குறைந்தபட்ச ஊதியக் கொள்கையைச் செயல்படுத்துவது மற்றும் அமைப்பது தொடர்பான மதிப்பீட்டுச் செயல்முறையிலும், அரசாங்கத்திற்கான பரிந்துரைகளிலும் ஒரு முக்கிய உள்ளீடாகப் பயன்படுத்தப்படும்.
இது தொழிலாளர் நலன், வணிகத் தொடர்ச்சி மற்றும் நாட்டின் பொருளாதார மீள்திறன் ஆகியவற்றுக்கு இடையேயான சமநிலையைத் தொடர்ந்து முழுமையாக வலுப்படுத்தவும் உதவுகிறது என்று அந்த அறிக்கை கூறுகிறது.
இதனை செயல்படுத்துவது தொடர்பாக முதலாளிகள், ஊழியர்கள், முதலாளிகள் சங்கங்கள் மற்றும் தொழிற்சங்கங்களிடமிருந்து நேரடியாகக் கருத்துக்களையும் பின்னூட்டங்களையும் பெறுவதற்காக மார்ச் 30 முதல் ஏப்ரல் 29 வரை நாடு முழுவதும் 21 இடங்களில் மேலாண்மை கலந்துரையாடல் அமர்வுகள் நடத்தப்படும் என்று அமைச்சு அறிவித்துள்ளது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 26, 2026, 11:48 am
ஜாஹிட்டிடம் மன்னிப்புக் கேட்குமாறு ஜொகூர் அரண்மனை எனக்கு அறிவுறுத்தியது: ஓன் ஹபிஸ்
May 26, 2026, 10:29 am
கம்போங் ஜாவா லாடாங் பத்து அம்பாட் தமிழ்ப்பள்ளி கட்டுமானத்தை விரைவுபடுத்த நடவடிக்கை: குணராஜ்
May 26, 2026, 10:15 am
மலேசியா - இந்தியா உறவை மேலும் பலப்படுத்த மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் உறுதி
May 25, 2026, 2:53 pm
