செய்திகள் மலேசியா
ஒப்பந்த மருத்துவர்கள் சகாப்தத்தை முடிவுக்குக் கொண்டு வருவது ஒரு முக்கியமான முதல் படியாகும்; ஆனால் அதுவே இறுதித் தீர்வு அல்ல: சுகாதார அமைச்சர்
புத்ராஜெயா:
ஒப்பந்த மருத்துவர்கள் சகாப்தத்தை முடிவுக்குக் கொண்டு வருவது ஒரு முக்கியமான முதல் படியாகும்.
ஆனால் அதுவே இறுதித் தீர்வு அல்ல என்று சுகாதார அமைச்சர் டத்தோஶ்ரீ டாக்டர் ஜூல்கில்ளி அஹ்மத் கூறினார்.
சுகாதார அமைச்சு 2029ஆம் ஆண்டுக்கு முன்னர் அனைத்து பொது சுகாதார நிலையங்களிலும் முழுமையான இலக்கவியமயமாக்க செயல்படுத்த இலக்கு நிர்ணயித்துள்ளது.
இதன் மூலம் அதிகாரத்துவத்துடனான போர் கலாச்சாரத்தையும், சுமையாக இருக்கும் காகித வேலைகளின் குவியல்களையும் ஒழிக்க உள்ளது.
சுகாதாரப் பணியாளர்களை வாட்டி வதைக்கும் அதிகப்படியான பணிச்சுமை, மன அழுத்தம் ஆகியவை ஒரு யதார்த்தம் என்பதையும், அதற்கு ஒரு விரிவான சீர்திருத்தம் தேவை என்பதையும் தாம் புரிந்து கொண்டு ஏற்றுக் கொள்வதாக அவர் கூறினார்.
நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிப்பது என்ற தங்களின் உண்மையான கடமைக்கு மருத்துவர்கள் திரும்ப வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம்.
சுகாதார அமைச்சகத்தின் கவனம் இப்போது வெறும் விளக்கங்களை அளிப்பதில் இல்லை, மாறாக ஒரு விரிவான மற்றும் பயனுள்ள தீர்வைக் காண்பதில் உள்ளது.
இந்த நாட்டில் உள்ள ஒவ்வொரு சுகாதாரப் பணியாளரின் கண்ணியத்தையும் உயர்த்தி, அதை மீட்டெடுக்கும் வகையில், இந்த அமைப்பை நாங்கள் மேம்படுத்தி வருகிறோம் என்று அவர் ஒரு அறிக்கையில் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 26, 2026, 11:48 am
ஜாஹிட்டிடம் மன்னிப்புக் கேட்குமாறு ஜொகூர் அரண்மனை எனக்கு அறிவுறுத்தியது: ஓன் ஹபிஸ்
May 26, 2026, 10:29 am
கம்போங் ஜாவா லாடாங் பத்து அம்பாட் தமிழ்ப்பள்ளி கட்டுமானத்தை விரைவுபடுத்த நடவடிக்கை: குணராஜ்
May 26, 2026, 10:15 am
மலேசியா - இந்தியா உறவை மேலும் பலப்படுத்த மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் உறுதி
May 25, 2026, 2:53 pm
