செய்திகள் மலேசியா
ஜாலான் துன் எச்.எஸ். லீ தீ விபத்து: வெளிநாட்டவர் பலி
கோலாலம்பூர்:
இன்று அதிகாலையில் இங்குள்ள ஜாலான் துன் எச்.எஸ். லீயில் உள்ள மூன்று மாடிக் கடைக் கட்டிடம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில், வெளிநாட்டைச் சேர்ந்த ஆடவர் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் மேலும் 11 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.
இச்சம்பவம் தொடர்பாக அதிகாலை 2.13 மணிக்கு தமது தரப்பு அவசர அழைப்பைப் பெற்றதாகக் கோலாலம்பூர் மலேசிய தீயணைப்பு, மீட்புத் துறையின் (ஜே.பி.பி.எம்.) செயல்பாட்டுக் கட்டுப்பாட்டு மையம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஜாலான் ஹாங் துவா தீயணைப்பு, மீட்பு நிலையத்தைச் சேர்ந்த 45 உறுப்பினர்கள், தித்திவாங்சா, புடு, செந்தூல், ஸ்ரீ ஹார்த்தாமாஸ் தீயணைப்பு வீரர்களின் உதவியுடன், சம்பந்தப்பட்ட வளாகத்திற்கு அனுப்பப்பட்டதாக நடவடிக்கைத் தளபதி அஸ்ருல் கைரி அபு பக்கார் கூறினார்.
"அக்கட்டிடத்தில் இருந்த சம்பந்தப்பட்ட 12 பாதிக்கப்பட்டவர்களும் வெளிநாட்டவர்களாவர். அவர்களில் 10 ஆண்கள் உட்பட இரண்டு பெண்கள் இருந்தனர்.
"நான்கு ஆண்கள் இரண்டாவது மாடியில் இருந்து வெற்றிகரமாக மீட்கப்பட்டனர். அதே சமயம், கூரையில் சிக்கிக் கொண்ட இரண்டு ஆண்களும் ஒரு பெண்ணும், ஏணியைப் பயன்படுத்தி கீழே கொண்டு வரப்பட்டனர்" என்றார் அவர்.
மீட்கப்பட்ட 11 பாதிக்கப்பட்டவர்கள், மேலதிக சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக அவர் மேலும் கூறினார்.
அந்தக் கட்டிடத்தின் தரை தளம், முதல் தளத்தைத் தீ சூழ்ந்ததாகவும், கட்டிடக் கட்டமைப்பில் 50 சதவீதம் அழிந்ததாகவும் அஸ்ருல் கைரி தெரிவித்தார்.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
May 26, 2026, 11:48 am
ஜாஹிட்டிடம் மன்னிப்புக் கேட்குமாறு ஜொகூர் அரண்மனை எனக்கு அறிவுறுத்தியது: ஓன் ஹபிஸ்
May 26, 2026, 10:29 am
கம்போங் ஜாவா லாடாங் பத்து அம்பாட் தமிழ்ப்பள்ளி கட்டுமானத்தை விரைவுபடுத்த நடவடிக்கை: குணராஜ்
May 26, 2026, 10:15 am
மலேசியா - இந்தியா உறவை மேலும் பலப்படுத்த மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் உறுதி
May 25, 2026, 2:53 pm
