செய்திகள் மலேசியா
மாணவி நூர்ஃபிஸ்யா கொலை வழக்கு: கல்லூரி மாணவர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு
கோத்தா பாரு:
கடந்த ஏப்ரல் 30 ஆம் தேதி கெத்தேரேவில், 19 வயதான நுர்ஃபிஸ்யா ஸுல்கிஃப்லியைக் கொலை செய்த குற்றச்சாட்டில், கல்லூரி மாணவர் ஒருவர் இன்று இங்குள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டார்.
19 வயதுடைய குற்றஞ்சாட்டப்பட்ட முஹம்மத் ஹாஜிம் முஹம்மத், மாஜிஸ்திரேட் ராயிஸ் இம்ரான் ஹமிட் முன்னிலையில் குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டபோது, அதைப் புரிந்துகொண்டதாகத் தலையசைத்தார்.
இருப்பினும், இந்த வழக்கு உயர் நீதிமன்றத்தின் அதிகார வரம்பிற்குட்பட்டது என்பதால், குற்றஞ்சாட்டப்பட்டவரிடமிருந்து எந்தவொரு வாக்குமூலமும் பதிவு செய்யப்படவில்லை.
குற்றச்சாட்டின்படி, குற்றஞ்சாட்டப்பட்டவர், 19 வயதான நுர்ஃபிஸ்யா ஸுல்கிஃப்லிக்கு மரணத்தை ஏற்படுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.
இந்தச் செயல், இங்குள்ள கெத்தேரேவின் ஜாலான் பெங்காலான் பியாவில், ஏப்ரல் 30 ஆம் தேதி இரவு 11.40 மணி முதல் மே 1 ஆம் தேதி நள்ளிரவு 12.20 மணிக்குள் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.
குற்றஞ்சாட்டப்பட்டவர் தண்டனைச் சட்டத்தின் பிரிவு 302-ன் கீழ் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார். குற்றம் நிரூபிக்கப்பட்டால் மரண தண்டனை அல்லது 40 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், மரண தண்டனை விதிக்கப்படாவிட்டால், குறைந்தபட்சம் 12 பிரம்படிகளும் விதிக்கப்படலாம்.
கிளாந்தான் மாநில வழக்குத் தொடுப்பு இயக்குநர் வான் அஜிமா யாகூப் தலைமையிலும், துணை வழக்குத் தொடரும் அதிகாரிகள் முஹம்மத் நாட்ஸிர் அப்துல்லாஹ், அஹ்மத் நாபில் முஹம்மத் அஸ்ரி ஆகியோரின் உதவியுடனும் வழக்குத் தொடர்பு மேற்கொள்ளப்பட்டது. குற்றஞ்சாட்டப்பட்டவர் வழக்கறிஞர் முஹம்மத் அலியாஸ் இப்ராஹிமால் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்டார்.
இதற்கு முன்னர், பல நிபுணர் அறிக்கைகளைப் பெறுவதற்காக, ஒரு வழக்கு மேலாண்மை தேதியை வான் அஜிமா கோரியுள்ள நிலையில் மறு விசாரணை, வழக்கு மேலாண்மைக்கான தேதியாக ஜூலை 2 ஆம் தேதியை நீதிமன்றம் நிர்ணயித்துள்ளது.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
May 26, 2026, 11:48 am
ஜாஹிட்டிடம் மன்னிப்புக் கேட்குமாறு ஜொகூர் அரண்மனை எனக்கு அறிவுறுத்தியது: ஓன் ஹபிஸ்
May 26, 2026, 10:29 am
கம்போங் ஜாவா லாடாங் பத்து அம்பாட் தமிழ்ப்பள்ளி கட்டுமானத்தை விரைவுபடுத்த நடவடிக்கை: குணராஜ்
May 26, 2026, 10:15 am
மலேசியா - இந்தியா உறவை மேலும் பலப்படுத்த மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் உறுதி
May 25, 2026, 2:53 pm
