செய்திகள் மலேசியா
சரியான இடங்கள், நிதி, விளம்பர ஆதரவாளர்கள் கிடைத்தால், இசை விழாக்களை நடத்த பினாங்கு தயாராக உள்ளது: வோங் ஹான் வாய்
ஜார்ஜ் டவுன்:
பொருத்தமான இடங்கள், நிதி, ஆதரவாளர்கள் கிடைத்தால், பினாங்கு மாநிலத்தில் ஒரு இசைத் திருவிழாவை நடத்த மாநிலம் தயாராக உள்ளது என்று மாநில செயற்குழு உறுப்பினர் வோங் ஹான் வாய் கூறினார்.
பொருத்தமான இடம், தகுந்த நிதி, விளம்பர ஆதரவாளர்களுடன் பல்வேறு இசைத் திருவிழாக்களை நடத்த மாநிலம் தயாராக உள்ளது என்று மாநில சுற்றுலா, படைப்பாற்றல் பொருளாதாரக் குழுவின் தலைவர் கூறினார்.
"உண்மையில், 2024-ல் பினாங்கு பாலம் சர்வதேச மாரத்தான் போட்டியின் போது, நாங்கள் பத்து கவானில் ஒரு இசைத் திருவிழாவை நடத்தினோம், ஆனால் அதில் பெரும்பாலும் ஓட்டப்பந்தய வீரர்களே கலந்து கொண்டனர்," என்று அவர் இன்று மாநில சட்டமன்றத்தில் தெரிவித்தார்.
"இது இரவு 9 மணி முதல் 10 மணி வரை நடைபெற்றதால், பலருக்கு இதைப் பற்றித் தெரிந்திருக்காவில்லை. ஆனால், இதில் கலந்துகொண்ட பங்கேற்பாளர்கள், பொழுதுபோக்கு, இசை அம்சங்களுடன் ஓடும் அனுபவத்தையும் அனுபவிக்க முடிந்தது," என்றும் அவர் மேலும் கூறினார்.
மாநிலம் ஒரு நீர்த் திருவிழாவை ஏற்பாடு செய்யத் திட்டமிட்டுள்ளதா என்பது குறித்து ஜோசப் என்ஜி சூன் சியாங் (பிஎச் - ஏர் இடாம்) எழுப்பிய கூடுதல் கேள்விக்கு வோங் (பிஎச் - பாயா தெருபோங்) பதிலளித்தார்.
மாநிலத்தில் ஏற்கனவே உள்ள சுற்றுலாத் தலங்களை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், பார்வையாளர்களுக்கு அனுபவப்பூர்வமான சுற்றுலாவை ஊக்குவிப்பதிலும் பினாங்கு அரசு கவனம் செலுத்தி வருகிறது என்று வோங் கூறினார்.
"பினாங்கு மலைக்குச் செல்வது என்பது வெறும் மலையைப் பார்ப்பது மட்டுமல்ல, மலைப்பாதைகளில் மலையேறுதல், இரவில் முகாமிடுதல், இரவு நேர நடைப்பயிற்சி போன்ற பிற அனுபவங்களையும் உள்ளடக்கியதாக இருக்கலாம். இது போன்ற நல்ல அனுபவங்களை பார்வையாளர்களும் சுற்றுப்பயணிகளும் பெறலாம்," என்று அவர் கூறினார்.
உள்நாட்டு, சர்வதேச சுற்றுலாப் பயணிகளின் பல்வேறு பிரிவினரைக் கவரும் வகையில், பாரம்பரியம், கலாச்சாரம், இயற்கையை அடிப்படையாகக் கொண்ட ஊடாடும் பார்வையாளர் அனுபவங்களில் மாநிலம் அதிக கவனம் செலுத்த இலக்கு கொண்டுள்ளது என்றும் அவர் கூறினார்.
இதனால்தான், பார்வையாளர்களை ஈர்ப்பதற்கும், மாநிலத்தில் உள்ள சுற்றுலா மற்றும் விளையாட்டு நிகழ்வுகளை உயிர்ப்பிப்பதற்கும் இசை விழாக்களை ஏற்பாடு செய்ய மாநிலம் தயாராக உள்ளது என்றும் அவர் கூறினார்.
இதற்கிடையில், 'விசிட் மலேசியா இயர் 2026'-ஐ முன்னிட்டு, பினாங்கு அரசாங்கம், பினாங்கு குளோபல் டூரிசம் (PGT) மூலம், மாநிலத்தின் சுற்றுலா ஈர்ப்புகளை வலுப்படுத்த பல்வேறு முயற்சிகளைத் திட்டமிட்டு வருவதாக வோங் கூறினார்.
மாநிலத்தில் உள்ள புதிய ஈர்ப்புகளில் பினாங்கு மாநில அருங்காட்சியக வாரியத்தின் வாகனக் காட்சியகம், குவார் கெபார் தொல்பொருள் காட்சியகம், ஃபெர்ரிங்கி விரிகுடா, பினாங்கு நீர்வழி மாநாட்டு மையம் ஆகியவை அடங்கும் என்று அவர் கூறினார்.
லின் சியாங் சியோங் கலைக்கூடம், பினாங்கு வரலாற்றுக் காட்சியகம், பினாங்கு இந்திய பாரம்பரியக் காட்சியகம் மற்றும் கலாச்சார மையம், பினாங்கு படகு அருங்காட்சியகம் மற்றும் ஸ்ட்ரெய்ட்ஸ் ஓரியண்டல் அருங்காட்சியகம் ஆகியவையும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன என்றும் அவர் மேலும் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 26, 2026, 11:48 am
ஜாஹிட்டிடம் மன்னிப்புக் கேட்குமாறு ஜொகூர் அரண்மனை எனக்கு அறிவுறுத்தியது: ஓன் ஹபிஸ்
May 26, 2026, 10:29 am
கம்போங் ஜாவா லாடாங் பத்து அம்பாட் தமிழ்ப்பள்ளி கட்டுமானத்தை விரைவுபடுத்த நடவடிக்கை: குணராஜ்
May 26, 2026, 10:15 am
மலேசியா - இந்தியா உறவை மேலும் பலப்படுத்த மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் உறுதி
May 25, 2026, 2:53 pm
