நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

என் நண்பர் விஜய் தமிழக முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு மனமார்ந்த வாழ்த்துகள்: பிரதமர் அன்வார் 

கோலாலம்பூர்:

என் நண்பர் விஜய் தமிழக முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு மனமார்ந்த வாழ்த்துகள் என்று பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

பல ஆண்டுகளாக அவரது அபிமான ரசிகர்கள், ஊழல் அரசியல்வாதிகளையும் பலதரப்பட்ட வில்லன்களையும் ஒரு சிறு இடைவேளைக்குப் பிறகு, மூன்று மணி நேரத்திற்குள் தோற்கடிப்பதைப் பார்த்து வந்தனர்.

தமிழக மக்கள் இப்போது விஜய்யிடம், திரையில் அவர் ஏற்று நடித்த எந்தவொரு பாத்திரத்தையும் விட மிகப் பெரிய ஒரு பொறுப்பை ஒப்படைத்துள்ளனர்.

அவரின் ஒரு விரல் புரட்சி இப்போது மிகப் பெரிய சரித்திரம் படைத்துள்ளது.

மலேசியாவும் தமிழகமும் தலைமுறை தலைமுறையாக ஆழமான வரலாற்று, கலாச்சாரம், மக்களுக்கு இடையேயான உறவுகளைப் பகிர்ந்து கொள்கின்றன.

வரும் ஆண்டுகளில் முதலமைச்சர் விஜய்யுடன் நெருக்கமாகப் பணியாற்ற ஆவலுடன் உள்ளேன் என்று டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset