செய்திகள் உலகம்
‘நரக இல்லத்தில்’ அடைத்து வைக்கப்பட்ட குழந்தைகள்: உலகையே உலுக்கிய ஜெர்மன் தம்பதியின் கொடூரம்
மாட்ரிட்:
மனிதநேயத்தையே கேள்விக்குறியாக்கும் அளவுக்கு கொடூரமான சம்பவம் ஒன்று ஸ்பெயினில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. மூன்றரை ஆண்டுகள் காலமாக, குப்பைகள் குவிந்த ‘நரக இல்லம்’ ஒன்றில் தங்களது மூன்று குழந்தைகளையும் உலகத்திலிருந்து முற்றிலும் துண்டித்து அடைத்து வைத்திருந்த ஜெர்மன் தம்பதியினருக்கு, ஸ்பெயின் நீதிமன்றம் இரண்டு ஆண்டுகள் 10 மாதங்கள் சிறைத்தண்டனை விதித்துள்ளது. இந்த வழக்கு ஸ்பெயின், ஜெர்மன் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் கடும் கண்டனத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
வடக்கு ஸ்பெயினின் ஒவியேடோ நகர நீதிமன்றம், 54 வயதான தந்தையும், 49 வயதான தாயும் குழந்தைகளுக்கு எதிராக உளவியல் ரீதியான துஷ்பிரயோகம், கடுமையான புறக்கணிப்பு செய்ததாக தீர்ப்பளித்தது. இருப்பினும், “சட்டவிரோத சிறைவைப்பு” என்ற மிகக் கடுமையான குற்றச்சாட்டிலிருந்து அவர்கள் விடுவிக்கப்பட்டனர். இதற்கு முன்னர், வழக்கறிஞர்கள் அந்தத் தம்பதியினருக்கு 25 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை கோரியிருந்தனர்.
இந்த மனிதாபிமானமற்ற சம்பவம் கடந்த ஏப்ரல் 2025-இல் வெளிச்சத்துக்கு வந்தது. எட்டு வயது இரட்டையர்கள் உட்பட 10 வயது சிறுவன் ஆகிய மூன்று குழந்தைகள், அண்டை வீட்டாரின் தகவலைத் தொடர்ந்து போலிஸாரால் மீட்கப்பட்டனர். சம்பவ இடத்துக்குச் சென்ற அதிகாரிகள், அந்த வீட்டை “கொடூரத்தின் உயிருள்ள சாட்சியம்” என்றும், “நரகத்தை நினைவூட்டும் இல்லம்” என்றும் விவரித்தனர்.
தம்பதியினர், கோவிட்-19 போன்ற நோய்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கவே வெளி உலகத்திலிருந்து தனிமைப்படுத்தியதாக வாதிட்டனர். ஆனால், உண்மையில் அந்தக் குழந்தைகள் அழுக்கு நிறைந்த நிலையில், இரவு உடையுடன், கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டுடன், மனஉளைச்சலால் பாதிக்கப்பட்ட நிலையில் காணப்பட்டதாக போலிஸார் தெரிவித்தனர். மேலும், வீடு முழுவதும் குப்பைகள் குவிந்திருந்ததோடு, மிக மோசமான நிலையில் இருந்த ஒரு பூனை கூட மலக்கழிவுகளால் சூழப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.
அதிர்ச்சியை அதிகரிக்கும் வகையில், குழந்தைகள் டயப்பர், முகக்கவசம் அணிய கட்டாயப்படுத்தப்பட்டதாகவும், வீட்டு முற்றத்திற்குக் கூட செல்ல அனுமதிக்கப்படாமல், வெளி உலகத்தைப் பார்க்க முடியாதபடி முற்றிலும் தனிமைப்படுத்தப்பட்டிருந்ததாகவும் தெரியவந்துள்ளது. இது வெறும் பெற்றோர் தவறல்ல; குழந்தைகளின் அடிப்படை மனித உரிமைகளை நசுக்கிய ஒரு கொடூரமான செயல் என சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
June 5, 2026, 3:14 pm
அடுத்தடுத்து வெடிக்கும் எரிமலை: இந்தோனேசியாவில் பதற்றம்
June 5, 2026, 12:48 pm
கியூபா அதிபருக்கு அமெரிக்காவின் அதிரடி தடை: சர்வதேச அரசியலில் புதிய பரபரப்பு
June 5, 2026, 11:27 am
தாகத்தின் கொடூரம்: சஹாரா பாலைவனத்தில் 49 பேர் பரிதாப பலி
June 5, 2026, 9:56 am
புறப்படுவதற்கு முன் பரபரப்பு:.லுஃப்தான்சா ட்ரீம்லைனர் திடீரென சாய்ந்து விபத்து
June 4, 2026, 2:39 pm
ஆசியான் நாடுகளுக்கான பிரம்மாண்டமான புதிய கடல்வழிப் பாதை: சீனாவின் வரலாற்றுச் சாதனை
June 3, 2026, 2:43 pm
ஐ.நா. சபையின் புதிய தலைவராகிறார் வங்கதேச வெளியுறவு அமைச்சர் கலீலுர் ரஹ்மான்
June 3, 2026, 12:01 pm
ஜப்பானை உலுக்கிய ஜாங்மி புயல்: உச்சக்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை
June 3, 2026, 10:07 am
2026 உலகக்கோப்பை சர்ச்சை: பிரபல சுவரோவிய கலைஞர் ஃபிஃபா மீது வழக்கு
June 2, 2026, 5:22 pm
